ETV Bharat / state

பாக்., இளம் பெண்ணுக்கு இதயம் கொடுத்த இந்தியா.. சென்னை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்! - pakistan girl heart transplant - PAKISTAN GIRL HEART TRANSPLANT

Pakistan Girl Heart Transplant: பாகிஸ்தான் இளம் பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மறுவாழ்வு கொடுத்துள்ளது, சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம். வாழ்நாளை எண்ணிக்கொண்டு உயிருக்குப் போராடி வந்த அந்த பெண் கண்ணீர் மல்க நாட்டிற்கே நன்றி தெரிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan Girl Heart Transplant
Pakistan Girl Heart Transplant
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 5:50 PM IST

Pakistan Girl Heart Transplant

சென்னை: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணான ஆயிஷா ரஷான், கடந்த 10 ஆண்டுகளாக இருதய பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தனது இருதயப் பிரச்சனைக்கு தீர்வு காண தனது அம்மா சனோபருடன் இந்தியா வந்துள்ளார்.

ஆயிஷா ரஷானின் இருதயம் செயலிழக்காமல் இருக்க, சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹேல்த்கேர் மருத்துவமனையில் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருதயத்தில் பம்ப் கருவி பொருத்தியுள்ளனர்.

பின்னர், பாகிஸ்தான் சென்ற ஆயிஷா, கடந்த 4 வருடங்களாக அந்த கருவியுடன் தனது நாட்களைக் கடந்து வந்துள்ளார். ஆனால், சில மாதங்கள் முன்பு, கருவி செயலிழக்கத் தொடங்கியதை அறிந்த ஆயிஷா மற்றும் அவரது தாயார் மீண்டும் சென்னைக்கு வந்தனர். அங்கு, ஆயிஷா உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு 35 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகலாம் என மருத்துவமனை தரப்பில் ஆயிஷாவின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய பண வசதி இல்லாததால் ஆயிஷாவின் பெற்றோர் தயக்கம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பணம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிஷாவுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டெல்லியில் இருந்து ஆயிஷாவுக்கு இருதயம் கிடைத்த நிலையில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குநர் சுரேஷ் ராவ் கூறும்போது, “பாகிஸ்தான் நாட்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டு, 14 வயதில் ஆயிஷா ரஷான் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்தார். பாகிஸ்தான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காததால், இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு வந்தார்.

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆயிஷா காத்திருந்தபோது, அவருக்கு மாரடைப்பு (Cardiac arrest) ஏற்பட்டது. பின்னர், உடனடியாக ஆயிஷாவிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலில் இருந்து ரத்தம் வெளியே வந்து, மீண்டும் ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்டு ரத்தம் உடலில் செல்வது தான் எக்மோ சிகிச்சை. ஆனால் இது நிரந்தரத் தீர்வு கிடையாது.

செயற்கை இருதயம்: இந்த நிலையில், இடது புறம் உள்ள இருதயத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு Left ventricular assist device (LVAD) என்ற செயற்கை சிறிய பம்ப் பொருத்தப்பட்டு, இருதயம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அவர் நன்றாக இருந்தார். பின்னர் பாகிஸ்தான் சென்று 4 ஆண்டுகள் நன்றாக பள்ளிக்குச் சென்று படித்தல், தனது வேலைகளை செய்து கொள்வது போன்றவற்றில் இருந்துள்ளார்.

4 ஆண்டுகள் கடந்த பின்னர் வலது புறத்தில் உள்ள இருதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வால்வு பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரிடம் போதுமான நிதியும் இல்லாமல் இருந்தார். அப்போது, இங்கு இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆயிஷாவிற்கு நிதியுதவி அளித்தனர். 10 மாதங்கள் இருதயம் கிடைப்பதற்கு காத்திருந்தோம். இருதயம் கிடைத்து அறுவை சிகிச்சை செய்து நன்றாக இருக்கிறார்.

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட உடலுறுப்பு தேவைப்படுவர்களுக்கு முதலில் உள்ளுரில் இருப்பவருக்கும், அதற்கு அடுத்து மாநில அளவிலும், அதன் பின்னர் இந்திய அளவிலும் உடல் உறுப்பு இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். அந்த உடல் உறுப்பு யாருக்கு சரியாக பொருந்தும் என கருதுகின்றனரோ, அந்த மருத்துவமனை உடல் உறுப்பை பெற்று நோயாளிக்கு பொருத்தலாம். இந்திய அளவில் யாருக்கும் பொருந்தாவிட்டால், சர்வதேச அளவில் உள்ளவர்களுக்கு பொருத்தும் போது அதனை பெற்று பொருத்த முடியும்.

4 மணி நேரத்தில் வந்தடைந்த இருதயம்: இவருக்கு டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இருதயம் இருப்பது தெரிந்த பின்னர் மருத்துவக்குழு டெல்லிச் சென்று பரிசோதனை செய்தது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. விமானம் மூலம் 4 மணி 30 நிமிடத்தில் டெல்லியில் இருந்து எடுத்து வந்து, 30 நிமிடம் அறுவை சிகிச்சை செய்து பொருத்தினோம். அதன் பின்னர் இருதயம் செயல்படத் துவங்கியது. இருதயம் இயல்பாக செயல்படத் தொடங்கி உள்ளது.

ஆயிஷாவிற்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்யும் போது ரத்தச்கசிவு போன்றவை ஏற்படாமல் அறுவை சிகிச்சை செய்தோம். அவர் குணமடைவதற்கு கூடுதலாக நாட்கள் தேவைப்பட்டது. இப்போது, ஆயிஷா மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். ஏனென்றால் முன்பு எல்வேர்ட் (Left ventricular assist device (LVAD) ) பொருத்தப்பட்டு இருந்தால், தோளில் ஒரு பை இருந்து கொண்டே இருக்கும். தற்பொழுது அந்தப் பை இல்லாமல் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும்.

எம்ஜிஎம் மருத்துவமனையில் உள்ள ஐஸ்வர்யா அறக்கட்டளை மூலம் நிதி பெற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம். Left ventricular assist device (LVAD) 60க்கும் மேற்பட்டவர்களுக்கு செய்துள்ளோம். இருதய நோய் பாதிப்பு இருந்தால் பிற உறுப்புகளுக்கும் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகளும் ஏற்படும்.

இருதயம் செயலிழக்கும் முன்னர் அறுவை சிகிச்சை செய்தால் மட்டும் பயன்படும். இடது புறம் உள்ள இருதயம் பாதிக்கப்பட்டால், Left ventricular assist device (LVAD) செயற்கை பம்ப் பொருத்தப்பட்டு செயல்பட வைக்க முடியும். பேட்டரி சார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஆயிஷாவின் தாயார் சனோபர், “பாகிஸ்தானில் மருத்துவ உள்கட்டமைப்பு முற்றிலும் மோசமாக உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானில் சிறந்த மருத்துவ வசதிகள் இல்லை.

இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். பாகிஸ்தானில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதி இல்லை என்று மருத்துவர்கள் கூறியபோது, டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி” என உணர்ச்சி பொங்க கூறினார்.

இதையும் படிங்க: சொட்டு சொட்டாய் ஊறும் கிணற்றுத் தண்ணீர்.. குடங்களோடு காத்திருக்கும் வத்தல்மலை மக்கள்! - Effects Of Summer Heat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.