ETV Bharat / state

"அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி மிக மோசம்" - மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டும் அமைச்சர் விளக்கமும்! - ISSUE OF DOCTORS VACANCY

அதிமுக ஆட்சியில் 6500 மருத்துவப் பணியிடங்களை உருவாக்கினர். ஆனால் திமுகவினர் உருவாக்கிய பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன்

மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 5:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில், "தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டு அவையும் செயல்பட்டு வருகிறது. அதில் முதலாம் ஆண்டு, 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டிற்கு தேவையான மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பணியிடங்கள் உருவாக்கம்: இறுதி ஆண்டில் நியமனம் செய்ய வேண்டிய மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவர் போன்றவற்றுக்கு இன்னும் 1200 மருத்துவப் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட வேண்டும். 11 மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கான இடத்திற்கு அனுமதி பெறப்பட்டது.அவற்றில் 6 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். அதற்கான இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே 2000 பணியிடங்கள் காலியாக உள்ளது.மேலும், புதியதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி 1200 பணியிடங்கள் உருவாக்கப்படு, மொத்தமாக 3200 பணியிடங்களில் ஆட்கள் நியமிக்க வேண்டியதிருக்கும். இந்த பணியிடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடமே தவிர, நோயாளிகள் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, சேவையின் அடிப்படையிலோ அல்ல.

சிரமம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் குறைந்தது 10 ஆயிரம் மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கினால் தான் மருத்துவர்களை துன்புறுத்தாத சுகாதாரத்துறை என நாம் கருத முடியும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 20,000 மருத்துவப் பணியிடங்களில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2500 இடங்களும், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் 1200 முதல் 1400 இடங்களும் காலியாக உள்ளது. அரசுப் பணிசாரமல் முதுகலை மருத்துவம் படித்த மாணவர்கள் அக்டோபரில் ஒரு பிரிவும், டிசம்பரில் ஒரு பிரிவும் வெளியில் செல்வார்கள்.

இதுமட்டும் அல்லாது, வேலைப்பளுவின் காரணமாக தொடர்ந்து விடுமுறையில் இருப்பவர்களும் உள்ளனர். பொது சுகாதாரத்துறையில் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனையும் சேர்த்தால் 20 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவ்வாறு பணியிடங்கள் காலியாக இருக்கும் போது பணி செய்ய சிரமம் இருந்தாலும் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

திமுக ஆட்சியை விரும்பிய மருத்துவர்கள்: கருணாநிதி ஆட்சியின் போது போடப்பட்ட அரசாணை 354-ஐ கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்றுவதாக திமுக சார்பில் உறுதியாக கூறினார்கள். அதனால் திமுக ஆட்சி வருவதற்கு மருத்துவர்கள் விரும்பினர்.ஆனால், வெட்கமான விஷயம் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6500 மருத்துவப் பணியிடங்களை உருவாக்கினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், புதியதாக கட்டப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு, கடந்த ஓராண்டாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் இல்லை என்பதால் திறக்காமல் மூடப்பட்டே இருக்கிறது.

மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன் சிறப்பு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

40 சதவீதம் செவிலியர்கள் 100 சதவீதம் பணி: சுகாதாரத்துறையில் கட்டிடங்கள் கட்டுவதையும், அதற்கான உபகரணங்கள் வாங்குவதையும் செய்துவிடுகின்றனர். ஆனால், அதனை பயன்படுத்த வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடத்தை எந்த ஆட்சியாளர்களும் செய்வதில்லை. யார் ஆட்சியிலிருந்தாலும் குடிமைப்பணி அதிகாரிகள் மருத்துவர்களிடம் அதிக வேலை வாங்குவதை ஒரு தொடர்கதையாக வைத்துள்ளனர். மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் உள்ள 16,200 செவிலியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவின் படி, மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுக்கான படுக்கை எண்ணிக்கையின் அடிப்படையில் செவிலியர் பணியிடங்கள் கொண்டு வர வேண்டும் என்ற விதியின் படி சுமார் 33 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..?

ஆனால் தற்போது, 40 சதவீதம் செவிலியர்களை வைத்து 100 சதவீதம் பணிகளை செய்து வருகின்றனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி மருத்துவர்கள் இல்லாவிட்டால் நோட்டிஸ் அளிப்பார்கள். அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இவர்கள் எண்ணம் அரசு மருத்துவமனைகளை மூட வேண்டும் என்பது தான்" என தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக மருத்துவம் இல்லை என்ற அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதுபோல், மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதுமட்டும் அல்லாது, இந்த ஆண்டு ஓய்வுபெறும் மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கிறது. அரசு மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட 35 விழுக்காடு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கின்ற மருத்துவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டு, அவர்கள் சோர்வு அடைந்துள்ளதாகவும், அவசர சிசிக்சைகள் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக அரசு பொறுப்பேற்றப்பின்னர் 1947 உதவி மருத்துவர்கள், 1291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர் பணியிடங்களும், 977 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு நிரந்தர பணியிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 மருந்தாளுநர் பணியிடங்களும், 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் என 5288 பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், சுகாதார அலுவலர் போன்ற பணியிடங்களில் 1583 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, 6744 நிரந்தர பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. தேசிய நல்வாழ்வு குழுமத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்றப்பின்னர் 11 ஆயிரத்து 716 இடங்கள் என 18 ஆயிரத்து 460 பணியிடங்கள் இதுவரை அரசு பதவியேற்று நிரப்பி இருக்கிறோம். ஆனால், பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை என்ற பொய்யான தோற்றத்தை கூறி வருகின்றனர்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2353 பணியிடங்களை நிரப்ப 23,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களின் தகவல்கள் சரி பார்க்க பட்டு, விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்கு தேர்வு நடத்துவதற்குரிய நிறுவனத்தை இறுதி செய்துள்ளோம். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி 27ஆம் தேதி ஒரே கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வு நடத்திய பிறகு அதிலிருந்து முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.