ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்! - Summer safety tips - SUMMER SAFETY TIPS

Summer: கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியே கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், சர்க்கரை சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என ரேலா மருத்துவமனை சிறப்பு மருத்துவர் சுருதி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 6:40 PM IST

Updated : Apr 24, 2024, 4:07 PM IST

சென்னை ரேலா மருத்துவமனையின் என்டோகிரினோலாஜி நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றம் சிறப்பு மருத்துவர் சுருதி சந்திரசேகரன்

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியவைகள் குறித்து சென்னை ரேலா மருத்துவமனையின் என்டோகிரினோலாஜி நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றம் சிறப்பு மருத்துவர் சுருதி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் உடல் நலத்திற்குத் தேவையான ஆலோசனைகள்: வெயில் நேரத்தில் முக்கியமான வேலை இருந்தால் மட்டும் வெளியில் வாருங்கள். அதே வேலையை வேறு நேரத்தில் செய்ய முடியும் என்றால், அதிகளவில் வெப்பம் தாக்கும் நேரத்தில் செல்லாதீர்கள். அதனையும் மீறி வெளியில் செல்ல வேண்டி இருந்தால், குடை எடுத்துக் கொண்டு, காட்டன் துணி அணிந்து செல்லலாம். கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்ச்சத்து மிகவும் முக்கியமானது.

வெளியில் செல்லும் போது சர்க்கரை அதிகளவில் உள்ள ஜூஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தர்பூசணி, கிர்னி பழம் போன்ற சர்க்கரைச் சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் சமைக்கும் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.

வீட்டில் சமைத்த உணவு இல்லாமல் வெளியில் சாப்பிடும் போது, காரம் அதிகம் இல்லாமல் எளிதில் ஜீரணம் ஆவது போல் உள்ள தயிர் சாதம், இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயில் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகம் வறுத்த உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீர் சத்து அதிகளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. கோடை காலத்தில் ஆல்கஹாலைத் தவிர்ப்பது நல்லது.

நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க மோர், இளநீர் எடுத்துக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். உடம்பில் சூரிய ஒளி நேரடியாக படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம். சரியான தூக்கம் எடுத்துக் கொள்வதுடன், காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஏசியில் இருந்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல சத்தான உணவை எடுத்துக் கொண்டால் தான் நமது உடலின் தோல் மற்றும் உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை.. தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆலோசனை! - Water Supply In Summer

Last Updated : Apr 24, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.