தூத்துக்குடி: சமீபத்தில் அனைவரையும் அச்சம் அடைய செய்த அமீபிக் மூளைக் காய்ச்சல் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிர் பிரிவு பேராசிரியர் மருத்துவர் ஜெயமுருகன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் அமீபிக் மூளைக் காய்ச்சல் என்றால் என்ன? தடுக்கும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி பேசியுள்ளார்.
அதில் அமீபா வைரஸ் என்பது பொதுவாக நீரிலும், மணல் பாங்கான பகுதிகளிலும் வாழும் நுண்ணுயிரி. நாம் வைத்திருக்கு நீர் தேக்கங்கள் அதாவது நீச்சல் குளங்கள், குட்டைகளில் போன்றவற்றில் இருக்கும். இவ்வாறான நீர் தேக்கங்கள் மாசு அடையும் சூழலில் விரைந்து உருவெடுக்க கூடியவை. இந்த மாசடைந்த நீரில் ஒருவர் குளிக்கும் போது மூக்கின் மூலம் உடலுக்குள் சென்று பின் மூளையை தின்னும் அபாயம் ஏற்படுகிறது.
இந்த நோயின் அறிகுறிகளாக தீவிர தலைவலி, வலிப்பு, கடுமையான காய்ச்சல் ஏற்படலாம். இந்த நோயின் பிடியில் இருந்து தப்பிக்க பெரும்பாலும் நீர் தேக்க நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக குளோரினேசன் செய்த தண்ணீரை பயன் படுத்துகிறோமா? என எப்போதும் உறுதி செய்துவிட்டு குளிக்க, குடிக்க உபயோகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: மூளையைத் தின்னும் அமீபா.. வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை!