தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி வாகன சோதனைச் சாவடியில், சிறப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த சொகுசு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காரில் கடத்தி வரப்பட்ட 440 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில், குட்கா கடத்தலில் ஈடுபட்டது திமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவி தமிழ்ச் செல்வியின் கணவர் போஸ் மற்றும் ஓட்டுநர் லாசர் என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் மீது திருப்பூர், விழுப்புரம், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு; ஏப்.29-க்கு ஒத்திவைப்பு! - Virudhunagar Women Court