ETV Bharat / state

முதல்வரின் அமெரிக்கா பயணம் குறித்து விமர்சனம்; ஈபிஎஸ்ஸுக்கு ஆர் எஸ் பாரதி பதிலடி! - rs bharathi criticized eps

RS bharathi: தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சுற்றுப்பயணம் குறித்து விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 11:03 PM IST

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு, பிறந்தநாள் விழா, தொடர்ந்து 100 நிகழ்வுகள் நடத்திய நெல்லை மாநகர கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, 2024 நெல்லை பாராளுமன்றத் தேர்தலில் உழைத்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, சிகாகோவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார். அதே போல் அமெரிக்காவில் தினமும் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அதனை எல்லாம் பார்க்கவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு கண் குருடு என தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர்கள் தன்னை விட்டு சென்று விடுவார்கள் என்ற பதட்டம். சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அதனால் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் அவர் பேசி வருகிறார். தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா சென்று திரும்பியவுடன் செய்தியாளர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக பேசுவார். எதனையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவுக்கு கிடையாது.

எதிர்கட்சிகள் திமுக மீது சட்ட - ஒழுங்கு சரியில்லை, பாலியல் குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர் என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் வழக்கமாக சொல்லும் ஒன்றுதான். இந்த குற்றச்சாட்டுகள் மணிப்பூர், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட தமிழகத்தில் பெரிதாக ஒன்று நடக்கவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் போட்டிகள் நடத்தி கஜானாவை காலி செய்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆசியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் முதல் முறையாக விளையாட்டு போட்டி நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களது ஆட்சியில் இதுபோன்று நடத்த முடியவில்லை என்ற வயிறு எரிச்சலில் பேசுகிறார்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : "மகாவிஷ்ணு விஷயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஏன் இவ்வளவு சீற்றம்?" - டிடிவி தினகரன் கேள்வி! - ttv about mahavishnu issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.