ETV Bharat / state

சென்னை மெரினா மரணம்: அதிமுகவுக்கு கேள்வி கேட்க தகுதி இல்லை என ஆ.எஸ்.பாரதி காட்டம்

சென்னை மெரினா மரணம் தொடர்பாக அதிமுக எங்களை கேட்வி கேட்க எந்த தகுதியும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ஆர் எஸ் பாரதி
ஆர் எஸ் பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் ரத்தினராஜாவிற்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "வான் சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது.

இதையும் படிங்க : மெரினா மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். குடை உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்று இருக்க வேண்டும். முன்கூட்டியே முன்னெச்சரிக்கை பொதுமக்களுக்கு தரப்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 6 பேர் இறந்திருக்கக் கூடிய செய்தி இருக்கிறது.

அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிடக்கூடாது. அதேபோன்று கடந்த 2005ம் ஆண்டு ஜெயலலிதா தூங்கிய காரணத்தினால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. எனவே, அதிமுகவினர் எங்களை கேள்வி கேட்க எந்த தகுதியும் இல்லை. ஏதோ துரதிஷ்டவசமாக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.