ETV Bharat / state

“பேருந்தில் அதிக கட்டணம்.. வந்தே பாரத் ரயிலால் பல நன்மை..” திமுக எம்பி திருச்சி சிவா பேச்சு! - Trichy Siva on Vande Bharat Train

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 9:32 PM IST

Trichy Siva on Vande Bharat Train: மதுரையில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் புதிய வந்தே பாரத் ரயிலை இன்று திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து திமுக எம்பி திருச்சி சிவா வரவேற்றார்.

வந்தே  பாரத் ரயில், எம்.பி திருச்சி சிவா
வந்தே பாரத் ரயில், எம்.பி திருச்சி சிவா (Credits- ETV Bharat Tamil Nadu)

திருச்சி: மதுரையில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்ட ரயில் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு மதியம் 2.45 மணிக்கு வந்தடைந்தது. திருச்சி ரயில் நிலையத்தில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தென்னக ரயில்வே மண்டல மேலாளர் அன்பழகன் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

எம்.பி திருச்சி சிவா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

பின்னர் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவிற்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைந்தது. இவ்வாறு மதுரையிலிருந்து வந்த வந்தே பாரத் ரயிலுக்கு, திருச்சி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் 157 மாணவ, மாணவிகள் வந்தே பாரத ரயிலில் கரூர் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், “பெங்களூருக்கு திருச்சியில் இருந்து பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

சாதாரண ரயிலுக்கு பதிலாக தற்போது வந்தே பாரத் கொடுத்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. இவை விரைந்து செல்லக்கூடிய ரயிலாக இருக்கும். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏற்கனவே ஒன்று இருந்தது. மற்றொரு வந்தே பாரத் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

பேருந்தில் கட்டணம் அதிகம், சிரமங்கள் உண்டு. இந்த ரயில்கள் திருச்சி மக்களுக்கும், வழிநெடுக இருக்கும் பயணிகளுக்கும் பேருதவியாக இருக்கும். மெட்ரோ ரயில் திருச்சிக்கு தேவையில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, இது தேவை, இது தேவை இல்லை என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்யும்.

எது தேவை என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். திருச்சி என்பது ஒரு வளர்ந்துள்ள நகரம், வளர்ந்து கொண்டிருக்கும் நகரம் ஏராளமான போக்குவரத்து நெரிசல்கள் இருக்கிறது. மதுரை, கோவை மற்ற ஊர்கள் இருப்பது போல திருச்சிக்கு மெட்ரோ ரயில் அவசியம்” என்றார்.

தேவை என்பது, காலத்தின் கட்டாயம் எதுவோ, அதை மக்கள் கோரிக்கையாக கருத்தில் கொண்டு மாநில அரசு அதற்கு முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பங்கைச் செய்வார்கள். மத்திய அரசு ரயில் திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால், நிதி ஒதுக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “இந்த இடத்தில் பதில் சொல்ல முடியாது. அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு வெளியில் தெரிவிக்கிறேன்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 380 ரூபாயில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. எப்படி புக் செய்வது? முழு பயண விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.