சென்னை: தமிழ் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 141-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, போரூரை அடுத்த துண்டலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான எம்பி டி.ஆர்.பாலு, மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் க.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்று திருவிகவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர, செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது, “திரு.வி.க.விற்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்த திட்டம் நிறைவேற இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம். மணிமண்டபம் கட்ட நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், நிதி பற்றாக்குறை சரி செய்ய சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் ஆர்வலர்கள் அதற்கு நிதி உதவி செய்து விரைவில் மிகப் பெரிய மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கு தமிழக அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதுணையாக இருப்பார்கள். தொழிற்சங்க தலைவராக இருந்தவர் திருவிக என்பது எல்லோருக்கும் தெரியும். மிகப்பெரிய போராட்டக்காரராக இருந்த திருவிக.தமிழ்த் தென்றலாகவும் விளங்கினார்” என்றார்.
முத்துதமிழ் முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பழனி முருகன் தமிழ் கடவுள் என்பது தெரியும். முருகனுக்காக எடுக்கப்பட்ட மாநாடு தமிழ் மாநாடாகத்தான் எடுக்கப்பட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல திமுக தயார்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!