சென்னை: தமிழக பாஜகவின் முன்னால் மாநிலத் தலைவர் நாராயணராவ்வின் மனைவி வசந்தரா தேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து அண்ணாமலை கூறும்போது, "என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடியிடம் நேரத்தைக் கேட்டிருக்கிறோம் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும். அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து நேர்மையான முறையில் ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பணம் கொடுத்துள்ளார்கள்.
வேங்கை வயல் பிரச்சனையில் மாநில அரசு தவறான முறையில் விசாரணை மேற்கொள்கிறது. யாரோ ஒரு ஐந்து பேரை அழைத்து வந்து அவரின் டிஎன்ஏ எடுத்து சோதனை செய்தால் எப்படி ஒத்துப் போகும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை. தொடர்ந்து பேசுகையில், திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிக்குச் சென்ற பெண்ணிற்கு 16 ஆயிரம் சம்பளம் என கூறிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
மேலும், மேசமான உணவு வழங்கப்பட்டதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அவர்கள் மீது வன்கொடுமை சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாகப் பேசுவது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஏன் விசாரணை தாமதம் ஆகிறது என்றால் ஜாமீன் வாங்குவதற்குத்தான். பெயில் கிடைத்தவுடன் கைது செய்வது போல் செய்து மாலையில் வெளியில் அனுப்பி விடுவார்கள். இதன் பிறகு, திமுக அரசு சாதனை செய்துவிட்டது என பெருமை பேசிக்கொள்வார்கள். சிறுமி அளித்த புகாரில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று என தெரிவித்தார்.
இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் பெங்களூரு விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறிய கருத்துக்குப் பதிலளித்த அண்ணாமலை பற்றி பாஜகவைப் பற்றிப் பேசினால் பிரபலமாகிவிடலாம் என்று சுற்றுகிறார்கள்.
அவர்களைப் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. மார்கெட் இல்லாத நடிகர்கள், மார்கெட் இல்லாத இயக்குநர்கள் பற்றி நாங்கள் பேசி ஏன் மார்கெட் வேல்யூவை ஏற்றிவிட வேண்டும்? அவர் தூங்கி எழுந்து வந்து சொல்லும் கருத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!