ETV Bharat / state

கோவையில் வாக்காளர்களுக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனையா? திமுக - பாஜக மாறி மாறி புகார்! - Lok Sabha Election 2024

Giving money to Voters in Coimbatore: பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து வாக்காளர்களுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பணம் வழங்கியதாகவும் மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாகவும் திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Giving Money To Voters In Coimbatore
Giving Money To Voters In Coimbatore
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 7:02 PM IST

கோயம்புத்தூர்: திமுகவின் கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோவை அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு, அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வாயிலாக, வாக்காளர்களுக்கு தலா ரூ.250 வீதம் பணம் அனுப்பப்படுவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடிக்கு இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், "கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். சிங்காநல்லூர், காந்திபுரம், துடியலூர், மேட்டுப்பாளையம், வடவள்ளி போன்ற இடங்களில் ஓட்டுக்கு பணம் அளித்து வருவதாகவும், குறிப்பாக, கவுண்டம்பாளையம் - இடையர்பாளையம் செல்லும் வழியில் தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடோனில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து அன்னதானம் கொடுப்பது போல் பணம் கொடுத்து வருகின்றனர்.

இது பற்றி காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தால், அவர்கள் வருவதற்கு முன்பு கட்சியினர் அங்கிருந்து சென்று விடுகின்றனர். குற்றவாளிகளை நாங்களே பிடித்துக் கொடுத்தால், பிடித்துக் கொடுத்த கட்சிக்காரர்களை மிரட்டுகின்றனர். மேலும், காவல்துறையினரும், அதிகாரிகளும் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர்.

அதிமுகவினரும் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இருந்த அதிகாரிகளை வைத்து பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். திமுகவினர் ஓட்டுக்கு 2,000 ரூபாயும் அதிமுகவினர் ஓட்டுக்கு 1,000 ரூபாயும் கொடுத்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, பூலுவம்பட்டி பகுதியில் பாஜகவினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு, "அந்த பணத்தை ஓட்டுக்கு பணம் கொடுக்க தான் எடுத்துச் சென்றாரா என்று தெரியவில்லை. லட்சக்கணக்கில் கொடுப்பதை எல்லாம் விட்டு விடுகிறார்கள். யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் தவறு.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் என்பதை கொடுக்க மாட்டோம், அதனை வெறுக்கிறோம், எதிர்க்கிறோம். அது போன்று இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நாங்கள் தவறே செய்ய மாட்டோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரளாவில் தாமரைக்கு இரட்டை ஓட்டு விழுகுதா? தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.