ETV Bharat / state

திமுக எம்எல்ஏ வீட்டின் முன் கட்சி நிர்வாகி திடீர் தற்கொலை முயற்சி - மதுரையில் பரபரப்பு! - Madurai DMK - MADURAI DMK

Madurai DMK District Secretary: மதுரை திமுக மாவட்டச் செயலாளர் தளபதி வீட்டின் முன்பு திமுக பிரமுகர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வடக்கு  எம்எல்ஏ தளபதி கோப்புப்படம்
மதுரை வடக்கு எம்எல்ஏ தளபதி கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 3:05 PM IST

மதுரை: மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான கோ.தளபதியின் வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரையில் உள்ளது. இங்கே, இன்று காலை 8 மணி அளவில் மதுரை மானகிரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கணேசன் என்பவர் மாவட்டச் செயலாளர் கோ தளபதி வீட்டிற்கு வந்துள்ளார்.

வந்தவர் வீட்டு வாசலில் நின்றபடி திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், கணேசனை உடனடியாக தடுத்து நிறுத்தி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக
தற்கொலை எண்ணத்தை கைவிடுக (Credits- ETV Bharat Tamil Nadu)

மானகிரி கணேசன் தற்போது கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை திமுக மாவட்டச் செயலாளர் வீட்டின் முன்பு திமுக பிரமுகர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2025 பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.