சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு ,தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளது.
-
2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் இன்று கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். pic.twitter.com/ke1Q71BU7A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் இன்று கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். pic.twitter.com/ke1Q71BU7A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 20242024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் இன்று கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். pic.twitter.com/ke1Q71BU7A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2024
அந்த வகையில் தி.மு.க சார்பாக அக்கட்சியின் தேர்தல் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் கனிமொழி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறியதாவது, "வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்குப் பயணம் செய்யவுள்ளோம் என்ற பட்டியலை இன்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இதனை முதல்வரிடம் அளித்து ஒப்புதல் பெற்ற பிறகு பயணம் மேற்கொள்ள உள்ளோம். என்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது குறித்துப் போகப் போக முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமைப்புகளின் கருத்துகளைப் பெற மின் அஞ்சல், அலைபேசி போன்றவை ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும் எனவும், தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதாநாயகியாகவும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!