சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான 18-ஆவது தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக முதலில் தொகுதிப் பங்கீடு மட்டும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியை பொருத்தவரையில் தலைமை வகிக்கும் திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 10, விசிக-2, சிபிஎம்-2, சிபிஐ-2, மதிமுக-1, ஐயூஎம்எல்-1, கொ.ம.தே.க-1 முறையே கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்
வ.எண் | தொகுதி | வேட்பாளர் |
1 | வட சென்னை | கலாநிதி வீராசாமி |
2 | தென் சென்னை | தமிழச்சி தங்க பாண்டியன் |
3 | மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
4 | ஸ்ரீபெரும்புதூர் | டி.ஆர்.பாலு |
5 | காஞ்சிபுரம் | வழக்கறிஞர் செல்வம் |
6 | அரக்கோணம் | ஜெகத்ரட்சகன் |
7 | திருவண்ணாமலை | அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி கருணாகரன் |
8 | வேலூர் | கதிர் ஆனந்த் |
9 | தருமபுரி | டாக்டர் செந்தில்குமார் அல்லது பி.பழனியப்பன் |
10 | பெரம்பலூர் | அருண் நேரு |
11 | கள்ளக்குறிச்சி | பொன்.கெளதம சிகாமணி |
12 | தேனி | தங்கத்தமிழ்செல்வன் |
13 | சேலம் | பி.கே.பாபு, செல்வகணபதி, ஆர்.பிரபு |
14 | ஈரோடு | பிரகாஷ்(மாநில இளைஞர் அணி துணை செயலாளர்) |
15 | நீலகிரி | ஆ.ராசா |
16 | தென்காசி | தனுஷ்குமார் |
17 | பொள்ளாச்சி | சண்முகசுந்தரம் |
18 | தஞ்சாவூர் | அஞ்சுகம் பூபதி அல்லது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் |
19 | ஆரணி | எ.வ.வே.கம்பன் |
20 | தூத்துக்குடி | கனிமொழி |
21 | கோவை | டாக்டர் மகேந்திரன் |
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!