ETV Bharat / state

திரும்பும் திசையெல்லாம் உதயசூரியன் - விளம்பர வாக்குகளில் முனையும் திமுக..! - Mayiladuthurai

DMK begins Parliament election work: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாக்கோட்டை ஊராட்சி பகுதியில் திமுக கட்சி சின்னமான உதயசூரியன் அனைத்து சுவர்களிலும் வரையப்பட்டு உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திரும்பும் பக்கமெல்லாம் உதயசூரியன்
திரும்பும் பக்கமெல்லாம் உதயசூரியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 10:35 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவருகிறது நாடாளுமன்றத் தேர்தல். குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சியினரிடையே கூடுதல் கவனத்தை பெற்று வருகிறது என்றே சொல்லாம். பொதுவாக தேர்தல் நெருங்க நெருங்க எந்தக் கட்சி, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும், ஒவ்வொரு கட்சிகளின் யூகம் என்ன, கட்சிகளின் திட்டங்கள் என தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

என்னதான் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் அதன் தேர்தல் வேலைகளை மும்மரமாகத் துவங்கியுள்ளது. பெரிய கட்சிகளில் இருந்து சிறிய கட்சிகள் வரை, ஒவ்வொரு கட்சிகளும் பொதுக்கூட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கில் செய்லபட்டு வரும் தமிழ்நாடு ஆளும் கட்சியான திமுக, அதன் ஒவ்வொரு மேடைகளிலும் உரைக்கச் சொல்லியும், குழுக்கள் அமைத்தும் மக்கள் மனதில் பதிவிட திட்டம்தீட்டி வருகிறது. அதேப்போல, என்னதான் அதிமுக, சட்டமன்ற தேர்தலையே முழுவீச்சாக நோக்கி பயணித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தன் நிலையை நாட்ட அதிமுக அதன் கூட்டணி குறித்து தீவிர அலசலில் உள்ளது.

இவ்வாறு இருக்கையில், நாம் தமிழர் கட்சி மட்டும் அதன் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து அடியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைவிட, ஆளும் கட்சியான திமுக அதன் தேர்தல் வேலைகளை ஒருபடி முன்னெடுத்துள்ளது. சமீபத்தில் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டு சுமூகமாக நடைபெற்ற முடிந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி பகுதியில், பிற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்திடாத வகையில் திமுக கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்தினை அனைத்து சுவர்களிலும், திரும்பிய பக்கமெல்லாம் வரைந்து மக்களை சுவர் விளம்பரங்கள் வாயிலாக வாக்குவங்கியைப் பெற முனைந்துள்ளனர்.

அதில் கலைஞர் கண்ட சின்னம், நமது சின்னம், உங்கள் சின்னம், ஏழைகளின் சின்னம், வாக்களிப்பீர் என்று எழுதப்பட்டப் பல்வேறு வாசகங்களுடன் தேர்தல் பணியினை முதல் ஆளாக விறுவிறுப்பாக திமுக தொடங்கியுள்ளது. இதனால் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் களம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து உதயசூரியனால் மெல்ல, சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

இந்த சாக்கோட்டை கிராமம் தான் 3வது முறையாக வெற்றி கண்டுள்ள கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடதக்கது. மயிலாடுதுறையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் மீண்டும் போட்டியிடுவாரா என கேள்வி எழுந்துள்ள நிலையில், இத்தொகுதியை காங்கிரஸ் கேட்டு வருவதால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி யாருக்கு கிடைக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கு: பிடிஆணையில் தலைமறைவான 3 பேர் கைது - சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.