வேலூர்: நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 218ஆம் ஆண்டின் நினைவு தினம் இன்று வேலூரில் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேலூர் கோட்டையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளைக் கொண்டு வந்தனர். அதில் குறிப்பாக, ஆங்கிலேயர் மற்றும் இந்திய சிப்பாய்களுக்கு இடையில் ஊதிய வேறுபாடு, பன்றிக் கொழுப்புக்களை கொண்டு துப்பாக்கிகளை துடைக்க வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளைக் கொண்டு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இதனால் இந்திய சிப்பாய்கள் மன உளைச்சளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதன் காரணமாக, வேலூர் கோட்டையில் 1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 600க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர், இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது.
இதையும் படிங்க: தாய், மகன் தற்கொலை வழக்கு... நிதி நிறுவன ஊழியர் கைது - VELLORE MOTHER SON SUICIDE