சென்னை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கும் அறிவிப்பை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உறுப்பினர்கள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெறுவோர், அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Budget Live Update: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!