ETV Bharat / state

“எதற்காக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தீர்கள்?”.. மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கினாரா காவலர்? - differently abled Woman attack - DIFFERENTLY ABLED WOMAN ATTACK

differently abled Woman attack by police: தூத்துக்குடியில் மகனின் இறப்புச் சான்றிதழ் வழங்க தொடர்ந்து அலைக்கழித்து வந்த நிலையில், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பெண் காவலர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவைகுண்டம் அரசு மருத்துவமனை
திருவைகுண்டம் அரசு மருத்துவமனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 7:39 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணபதி - முத்து ரத்தினம் தம்பதியி. இவர்களுக்கு பால்துரை என்ற மகனும், பிரம்ம முத்து என்ற மகளும் உள்ளனர். கணபதி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், மாற்றுத்திறனாளியான முத்துரத்தினம் அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பால்துரை வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி சமையல் வேலைக்குச் சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற பால்துரை, 23ஆம் தேதி மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக முத்துரத்தினத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக மயக்கமடைந்த நிலையில் இருந்த முத்துரத்தினத்திடம் கையெழுத்து வாங்கி அவரது மகனின் உடலை அடக்கம் செய்தனர்.

பின்னர் முத்துரத்தினத்திற்கு சுயநினைவு வந்த பின்னர் இதுகுறித்து கேட்டதற்கு, யாரும் முறையான பதில் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு முத்து ரத்தினம் தனது மகளுடன் சென்றுள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது மகனின் இறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனைக்கான சான்றிதழ் வாங்குவதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் சென்ற முத்துரத்தினத்தை தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது

இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இறப்பு பதிவுச் சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு முத்துரத்தினம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு முத்துரத்தினம் வீட்டிற்கு வந்த பெண் காவலர் ஒருவர், "நான் தான் உங்களுக்கு தேவையான நிவாரணத்தையும், சான்றிதழ்களையும் வாங்கித் தருகிறேன் என்று கூறினேனே? பின் எதற்கு முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தீர்கள்?" என்று கடுமையாக பேசி மாற்றுத்திறனாளி முத்துரத்தினத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் முத்துரத்தினம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, முறப்பநாடு காவல்துறையினர் முத்துரத்தினத்தின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். முத்துரத்தினத்தை தாக்கியது சிவந்திப்பட்டி காவல்நிலைய காவலரா அல்லது முறப்பநாடு காவலரா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில், முத்துரத்தினம் நெஞ்சுவலி காரணமாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துரத்தினம் நடந்த விவரத்தை கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பெண் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் தெரித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. எல்.முருகன் துவக்கி வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.