ETV Bharat / state

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகளைக் காலை 11 மணிக்குள் போட பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுரை! - Directorate of Public Health - DIRECTORATE OF PUBLIC HEALTH

Directorate of Public Health: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் சுகாதாரத்துறை பணியாளர்கள் காலை 11 மணிக்குள் முகாமிற்குச் சென்று தடுப்பூசி போட்டு விட்டுத் திரும்பி விட வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

Directorate of Public Health
Directorate of Public Health
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:11 PM IST

சென்னை: பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வெப்பநிலை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் மக்களுக்குப் பயனுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்குகள், அனைத்து சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மருந்துகளை வைக்கும் குளிர் சங்கிலி அறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுவர்களுக்கும், மருந்து அலமாரிக்கும் இடையில் போதிய இடைவெளி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது சுவர்களிலிருந்து வரும் வழக்கமான வெப்பத்தால் மருந்துகள் சேதமடைவதைத் தடுக்கும்.

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள் போடும் போது செவிலியர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் காலை 11 மணிக்குள் முகாமிற்குச் சென்று தடுப்பூசி போட்டு விட்டுத் திரும்பி விட வேண்டும். தற்பொழுதைய சூழ்நிலையில் இது மிகவும் பாதுகாப்பானதாக அமையும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பாஜகவுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை" - வீரப்பன் மகள் மனம் திறந்த பேட்டி! - Veerappan Daughter In Politics

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.