சென்னை: மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், நாளை முதல் நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு தீவுகளில் பினாங்கு தீவு அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய தீவாகும். இந்த தீவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மக்கள் தொழில், வணிகம் ஆகியவை செய்து அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
விமான நிலையம்:
இந்த தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு கோலாலம்பூர், தாய்லாந்து, சியோல், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பினாங்கு தீவில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு நேரடி விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் பல்வேறு தமிழக அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்துள்ளனர்.
#சென்னை மற்றும் #பினாங்கு இடையே தினசரி நேரடி விமான சேவைகளை (7x/வாரம்) இண்டிகோ @IndiGo6E நிறுவனம் வரும் டிசம்பர் 21 முதல் துவங்கவுள்ளது.#ChennaiAirport #FlyFromMAA #IndiGo #DirectFlights #DailyConnnection #InternationalDestination #NewDestination #AAIAirports #Asia #Malaysia… pic.twitter.com/C8gpGxfkW4
— Chennai (MAA) Airport (@aaichnairport) December 12, 2024
ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால், பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை டூ பினாங்கு விமான சேவை தொடக்கம்:
தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியாவில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க அனுமதியளித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவையை, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நாளை டிசம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதையும் படிங்க: நுகர்வோர்களை அலறவிடுவதில் ஃபிளிப்கார்ட் முதலிடம்!
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளை சனிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை பினாங்கு தீவை சென்றடையும். அதேபோல் பினாங்கு தீவில் இருந்து காலையில் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
மேலும், இந்த விமானம் சுமார் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய ஏர்பஸ் 320 (Airbus 320 family) ரகத்தை சேர்ந்தது. சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்களாகும்," என தெரிவித்துள்ளனர்.