ETV Bharat / state

திண்டுக்கல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் தற்கொலை! - Puducherry family suicide case

Puducherry family suicide case: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதி அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 9:41 PM IST

புதுச்சேரி: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (50). இவர் தனது மனைவி, மகன் சுதர்சன் மற்றும் மகள் உடன் கடந்த 7-ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு, சுற்றுலா வந்துள்ளனர். அப்போது புதுச்சேரி நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில், உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் அவர்கள் செக் அவுட் செய்யும் நேரம் என்பதால், விடுதி ஊழியர் வெகு நேரமாக கதவை தட்டி பார்த்த போது அவர்கள் கதவை திறக்கவில்லை. மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்த போது அவர்கள் 4 பேரும் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து விடுதி ஊழியர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் 4 பேரின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக
தற்கொலை எண்ணத்தை கைவிடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த தந்தை, தாய், மகன், மகள் ஆகிய 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'கூட்டிட்டு போகாதீங்கன்னு சொன்னோமே'.. சிறையில் விசாரணை கைதி மரணம்; விழுப்புரத்தில் பரபரப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.