ETV Bharat / state

விக்கி-நயன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்! தனுஷ் வழக்கில் ஐகோர்ட் அதிரடி! - DHANUSH NAYANTHARA ISSUE

நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் ,  நயன்தாரா, விக்னேஷ் சிவன்
சென்னை உயர் நீதிமன்றம் , நயன்தாரா, விக்னேஷ் சிவன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 2:17 PM IST

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் ‘வொண்டர் பார் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதற்கு, ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு, நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "கர்மா அசலும், வட்டியுமாக வந்து சேரும்"... நயன்தாரா பதிவால் மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்கான, ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (டிச.12) வியாழக்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.