ETV Bharat / state

ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா.. 2 வது முறையாக ஒத்திவைப்பு! - DHANUSH AND AISHWARYA DIVORCE CASE

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் இருவரும் மீண்டும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 1:35 PM IST

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சமூக வலைத்தளத்தில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதிக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையைத் தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் வழக்கில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இரண்டாவது முறையாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.