ETV Bharat / state

குண்டும் குழியுமாக உள்ள சிவகிரி நாதகிரி முருகன் கோயில்.. சீரமைத்துத் தர வலியுறுத்தல்! - Sivagiri NADHAGIRI MURUGAN TEMPLE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 2:56 PM IST

Tenkasi Nadhagiri Temple Road issue: சித்தர்கள் வாழும் ஸ்தலமாக கருதப்படும் தென்காசி நாதகிரி முருகன் கோயிலின் கிரிவலப்பாதை குண்டும் குழியுமாக காணப்படுவதால், வைகாசி விசாகத் திருவிழாவிற்கு முன்பாக கிரிவலப்பாதையும், மலையைச் சுற்றியுள்ள தேரோட்டச் சாலையையும் சீரமைத்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாதகிரி முருகன் கோயில் தார்ச்சாலை
நாதகிரி முருகன் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

தென்காசி: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், பக்தர்கள் எளிதாகச் சென்று வரக்கூடிய பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது நாதகிரி முருகன் கோயில். அப்படி சிறப்பு வாய்ந்த திருநாதகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திற்குட்பட்ட கூடலூர் கிராமத்தில் உள்ள மலை மீது அமைந்துள்ளது.

கிரிவலப்பாதையை சரிசெய்யக் கோரி சமூக ஆர்வலர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கூடலூர் முருகன் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் நாள்தோறும் 3 வேளை பூஜையும், மதியம் அன்னதான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம், செடி, கொடி என கோயிலைச் சென்றடையும் முன்னரே அங்குள்ள பசுமைக் காட்சிகள் பக்தர்கள் மனதை பாதி அமைதிப்படுத்துவதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, பல்வேறு சித்தர்கள் வழிபட்டிருப்பதாகவும், 2 பெண் சித்தர்கள் ஒடுக்கமும் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அவ்வப்போது சித்தர்கள் மலைமேல் அமர்ந்து திருக்காட்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பக்தர்கள் கிரிவலம் சென்று முருகனை வழிபடும் வண்ணம் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் கிரிவலத்தன்று பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மாதந்தோறும் நடக்கும் கார்த்திகை பூஜையின் போது நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அன்றைய தினம், பல்வேறு அமைப்பினர்களால் காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெறும்.

இந்த நிலையில், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை மேடுபள்ளமாக உள்ளதால், தரிசனம் செய்ய வரும்போது கடும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் மற்றும் நாதகிரி முருகன் கோயில் பக்தர்கள், அதனை சரிசெய்து தார்ச்சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், "சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கிரிவலப்பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அப்போது, இப்பாதையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் மலைப்பரப்பில் கிரிவலம் நடைபெறுவதற்கு ஏதுவாக மலையைச் சுற்றியுள்ள பாதையினை சீரமைத்து, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

குறிப்பாக, இந்தக் கோயிலின் முக்கிய திருவிழாவான வைகாசி திருவிழாவின் போது, கிரிவலப்பாதை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால், வைகாசி விசாகத் திருவிழாவிற்கு முன்பாகவே கிரிவலப் பாதையும், தேரோட்ட சாலையுமான மலையைச் சுற்றியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய பெய்லி பாலம்.. வயநாடு நிலச்சரிவில் உதவுவது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.