ETV Bharat / state

திமுக பவளவிழா: "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்" - மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு! - DMK coral festival - DMK CORAL FESTIVAL

DMK 75th Years Celebration: திமுகவின் பவளவிழாவையொட்டி வீதிகள் தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் கழகக்கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை
மு.க.ஸ்டாலின் அறிக்கை (Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 10:29 AM IST

சென்னை: திமுக துவங்கக் காரணமாக இருந்த அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17) மற்றும் திமுக துவங்கிய நாள் (செப்.17) என மூன்று நிகழ்வையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக நடத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த நிலையில், 2024 ஆண்டுடன் திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த பவளவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில், "திமுகவின் பவளவிழாவையொட்டி வீதிகள் தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி வீடுகள் தோறும் பறந்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணாவால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம்.

75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றிய இவ்வியக்கம் இந்த 2024 ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. "பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும்” என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள் தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் கழகக்கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்தபடியே அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..உதயநிதி கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.