நியூ யார்க்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். 2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் என்பரவை இத்தாலியின் ஜன்னிக் சின்னர் எதிர்கொண்டார்.
🇺🇸 🏆 A NEW CHAMPION IN NEW YORK 🏆 🇺🇸⁰⁰@usopen | #USOpen pic.twitter.com/qllwEFzPTp
— ATP Tour (@atptour) September 8, 2024
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜன்னிக் சின்னர், அமெரிக்க வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்து பாயின்ட்களை சேர்க்க விடாமல் தடுத்தார். இறுதியில் ஜன்னிக் சின்னர் 6-க்கு 3, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன்:
மேலும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக ஜன்னிக் சின்னர் கைப்பற்றி சாதனை படைத்தார். அதேநேரம் ஜன்னிக் சின்னருக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று இருந்தார்.
Thank you New York!! 🏆
— Jannik Sinner (@janniksin) September 8, 2024
Incredibly special to win my second slam title here after a great two weeks. Thank you for all the support, it means so much. I love this sport and it means everything to me, time to enjoy this moment with my team and my family before we get back to work… pic.twitter.com/oolNYXWWrk
இதன் மூலம் ஒரே சீசனில் ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 4வது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜன்னிக் சின்னர் படைத்துள்ளார். இதற்கு முன் மாட்ஸ் விலாண்டர், ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் ஆகிய மூவர் ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
JANNIK SINNER IS A TWO-TIME GRAND SLAM CHAMPION!! pic.twitter.com/E5VYumaSz6
— US Open Tennis (@usopen) September 8, 2024
முதல் இத்தாலிய வீரர்:
இந்த வெற்றி போக கூடுதலாக ஆடவர் டென்னிஸ் உலக தரவரிசையில் 23 வயதான ஜன்னிக் சின்னர் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
🏆🦊😀
— Janniksin_Updates (@JannikSinner_Up) September 9, 2024
Forza pic.twitter.com/9MNe9o2RRa
நடப்பாண்டில் ஜன்னிக் சின்னர் தான் ஆடிய 60 போட்டிகளில் 55ல் வெற்றிகளையும், ஐந்து போட்டிகளில் மட்டுமே தோல்வியையும் சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் ஆகிய மூன்று ஜாம்பவான்களுக்கு அடுத்த வரிசையில் அதிக தொடர் வெற்றிகளை குவித்த வீரர் என்ற மைல்கல்லை ஜன்னிக் சின்னர் எட்டியுள்ளார்.
பரிசுத் தொகை:
Jannik Sinner dedicates his US Open title to his aunt ❤️🩹 pic.twitter.com/E2YTjGSRUf
— US Open Tennis (@usopen) September 8, 2024
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னருக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 30 கோடி ரூபாய். கடந்த ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு கூட இந்த பரிசுத் தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல்லை மிஞ்சிய அமெரிக்க ஓபன்: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? - US Open Tennis