ETV Bharat / state

கொரட்டூரில் ஆடித் திருவிழா.. பெண் பக்தர்களால் நிரம்பி வழிந்த ரயில்வே சுரங்கப்பாதை! - Aadi month festival

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 9:32 PM IST

அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால், கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் பெண் பக்தர்களால் நிரப்பி காட்சியளித்தது.

பெண் பக்தர்களால் நிரம்பி காட்சியளித்த சுரங்கப்பாதை
பெண் பக்தர்களால் நிரம்பி காட்சியளித்த சுரங்கப்பாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். அதற்காக அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு வழிபாடுகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொரட்டூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது. அதில், 1008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்லும் காட்சி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது.

கொரட்டூர் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை கொரட்டூரில் அமைந்துள்ளது அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம். இக்கோயில் பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்து தெரிவித்துள்ளனர். தொன்மை மற்றும் மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆடி மாதத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடி மாதத் திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆடி மாதம் நான்காம் வார திருவிழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மனின் தாய் வீடான கொரட்டூர் கருமாரியம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், 1008 பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர். மேலும், "ஓம் சக்தி பராசக்தி" என்ற மந்திரம் விண்ணை முட்ட கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதையில் சென்ற போது, அந்த சுரங்கப்பாதையே பெண்களால் நிரம்பி மிகப்பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்தில் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலமானது ரயில்வே மேம்பாலம் அருகே 10 கிலோமீட்டர் சுற்றி வந்து கோவில் நிறைவடைந்தது.

இதற்கிடையே, முருகப் பெருமானுக்கு அலகு குத்துதல், தேர் இழுத்தல், பறவைக் காவடி போன்றவை நடைபெற்றது. அதனைக் கண்ட பொதுமக்களும் அரோகரா கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மாரத்தான் ஓட்டத்தில் இது ரொம்ப புதுசு; பெண்கள் சேலை அணிந்து பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.