ETV Bharat / state

"மொழி, மதம், சாதியை மறந்து அனைவரும் கூடியுள்ளீர்கள்" - சாரண இயக்க வைர விழாவில் உதயநிதி பேச்சு! - UDHAYANIDHI STALIN

மொழி, மதம், சாதியை மறந்து இந்தியாவின் குடிமகன் என்கிற அடிப்படையில் பாரத சாரண சாரணியர் வைர விழாவில் அனைவரும் ஒன்று கூடியுள்ளீர்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனத் தெரிவித்தார்.

சாரண இயக்க வைர விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசும் புகைப்படம்
சாரண இயக்க வைர விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசும் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 1:34 PM IST

திருச்சி: மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை நேற்று செவ்வாய்க்கிழமை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்தியாவில் 1950 ஆண்டு நவம்பர் 7ம் நாள் பாரத சாரண சாரணிய அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது வரை 18 பெருந்திரனணிகளும், 5 சிறப்புப் பெருந்திரளணிகளும் நடைபெற்றுள்ளன. பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக 2000ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை துரைப்பாக்கத்தில் சாரண சாரணியர் இயக்க பொன்விழா பெருந்திரளணி நடைபெற்றது. தற்போது 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வைர விழா நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்ட நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம் அருகே மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 28ஆம் தேதி முதல் பிப்.3ஆம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறுகிறது. இதனை நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் சாரண இயக்க வைர விழாவை துவக்கி வைத்த காட்சி
உதயநிதி ஸ்டாலின் சாரண இயக்க வைர விழாவை துவக்கி வைத்த காட்சி (ETV Bharat Tamil Nadu)

அடிப்படை வசதிகள்:

இந்த நிகழ்வில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளை சார்ந்த 25 ஆயிரம் சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணர்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள், சாரணியர்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள், திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்காக 450 கூடாரங்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் தங்குவதற்காக கூடாரங்கள், அலுவலகப் பணிகளுக்காக 32 கூடாரங்கள் என மொத்தம் 2,422க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாரண இயக்க வைர விழாவில் பங்கேற்ற மாணவர்கள்
சாரண இயக்க வைர விழாவில் பங்கேற்ற மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்வில் பங்கேற்கும் சாரண சாரணியர்கள் அனைவருக்கும் போதிய சத்தான சுவையான உணவு, குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், அவசரக்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவ சேவை வழங்கிடும் வகையில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ கூடாரங்கள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில் தேவையான இடங்களில் தீயணைப்பு வாகனங்களையும், தீயணைப்பு கருவிகளும் வைக்கப்பட்டு உரிய அலுவலர்களுடன் தயார் நிலையில் உள்ளது.

சாரண இயக்க வைர விழாவில் மேடையில் பேசிய அன்பில் மகேஸ் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர்
சாரண இயக்க வைர விழாவில் மேடையில் பேசிய அன்பில் மகேஸ் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் (ETV Bharat Tamil Nadu)

கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி:

நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கலாச்சாரத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் சிறந்த மாநிலம் தான் தமிழ்நாடு. பெருமைமிகு இந்த மண்ணுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி. அவர் நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமையடைகிறோம். கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் சாரணர்களுக்கானப் புத்தகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது" என்றார்.

சாரண இயக்க வைர விழாவில் கொடியேற்றி வைத்த உதயநிதி
சாரண இயக்க வைர விழாவில் கொடியேற்றி வைத்த உதயநிதி (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி:

தொடர்ந்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், "நான் துணை முதலமைச்சராக இங்கு கலந்து கொள்ளவில்லை. பள்ளி காலத்தில் சாரணர் இயக்கத்தில் நானும் இருந்துள்ளேன் என்கிற அடிப்படையில் பங்கேற்றுள்ளேன். என்னுடைய நண்பர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த ஒப்புக்கொண்டு அதை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். நூற்றாண்டு கொண்டாடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அவரால் தமிழக மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்" எனப் புகழாரம் சூட்டினார்.

சாரண இயக்க வைர விழாவில் பங்கேற்ற தமிழ்நாட்டு மாணவர்கள்
சாரண இயக்க வைர விழாவில் பங்கேற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)

ரூ.39 கோடி ஒதுக்கீடு:

அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சிக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் சாரண, சாரணியர் இயக்கத்தோடு ஒன்றிணைந்து விட்டார். அவர் எங்கு சென்றாலும் சாரணர் உடையில் தான் செல்கிறார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 2000ஆம் ஆண்டில் பொன் விழா நடந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது வைர விழா கொண்டாடப்படுகிறது.

சாரண இயக்க வைர விழாவில் உதயநிதி பேச்சு (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை"- கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி!

திராவிட மாடல் அரசு இந்த நிகழ்ச்சி நடத்த ரூ.39 கோடி ஒதுக்கியது. பிப்.3ஆம் தேதி வரை சுமார் 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், தமிழ்நாட்டின் கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளவும், மற்ற மாநிலத்தின் கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டு பிள்ளைகள் தெரிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவும். 1907ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஸ்கவூட் துவக்கி வைக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது.

சமத்துவபுரம் திட்டம்:

மொழி, மதம், சாதியை மறந்து இந்தியாவின் குடிமகன் என்ற அடிப்படையில் இங்கு அனைவரும் கூடியுள்ளீர்கள். மனிதர்கள் யாரும் ஒருவருக்கொருவர் எந்த வேறுபாடும் பார்க்காமல் மனித பண்புகளை உயர்த்தி வாழ வேண்டும் என்பது தான் கலைஞரின் குறிக்கோளாக இருந்தது. அதனால் தான் அவர் சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதில் அனைத்து சாதி, மத மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் அதை கொண்டு வந்தார். அதே போல தான் அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு ஒன்று கூடியுள்ளீர்கள். கலைஞரின் நூற்றாண்டு இங்கு கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்றார்.

முன்னதாக, சாரண, சாரணியர் இயக்க 75-வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலைகளும் அஞ்சல் உறைகளும் வெளியிடப்பட்டது. மேலும், கலைஞர் நூற்றாண்டு விழா வரலாற்று புகைப்படக் கண்காட்சி, துவக்கி வைத்தார். பின்னர் சாரண சாரணிய இயக்க கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக சாரண சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காதர், திருச்சி எம்பி துரை வைகோ, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.