ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் 288 கிராம ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான, 364 Kalaignar Sports Kits வழங்குதல், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறை மூலம் ரூ.19.21 கோடி மதிப்பில் 13 புதிய அரசு பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.9.15 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை திறந்து வைத்தல், பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 7,165 பயனாளிகளுக்கு ரூ.37.79 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஆர் காந்தி செங்கோல் வழங்கி சிறப்பித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், துணை முதலமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், யாசினி ஆகிய இரண்டு வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி துணை முதலமைச்சர் கௌரவித்தார்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட பல்வேறு திட்டங்களை நம்முடைய #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
— Udhay (@Udhaystalin) December 6, 2024
அந்த வகையில், கிராமப்புறங்களில் உள்ள திறமைமிகு விளையாட்டு வீரர்களுக்குத் துணை நிற்க கலைஞர் நூற்றாண்டில், ‘கலைஞர் விளையாட்டு… pic.twitter.com/OIK9Kg3kkd
பின்னர் விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர், "அம்பேத்கர் கொள்கையை கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசின் ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். பெண்கள் சுய மரியாதையுடன் வாழ, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள திட்டங்கள் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கூறும் தகவல்!
எல்லோரும் எது திராவிட மாடல் அரசு என கேள்வி கேட்பவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு, மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு மாதம்தோறும் ரூ.1 கோடியே 16 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ.19.21 கோடி மதிப்பில் 13 புதிய அரசு பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.15 கோடி மதிப்பில் முடிவுற்ற 28… pic.twitter.com/jtF5FID1Rg
— Udhay (@Udhaystalin) December 6, 2024
இந்த நிகழ்ச்சியில், மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முனிரத்தினம், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தையொட்டி, மேடையில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவ படத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.