சென்னை: வடக்கிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
துணை முதல்வர் ஆய்வு: இந்த நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகமாகி வருகிறது. இச்சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது. மதகுகளின் உறுதிதன்மை, ஏரி முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: குளம் போல் மாறிய குடியிருப்பு! வீடுகளை காலி செய்யும் மக்கள்..
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) October 16, 2024
சென்னை மாநகரில் ஓடுகின்ற அடையாற்றின் நீர்பிடிப்பு பகுதியான செம்பரம்பாக்கத்தின் தற்போதைய நீர் இருப்பு, நீர்… pic.twitter.com/QnZu4bJlfo
இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ அன்பரசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டனர். இதேபோல் தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள பல்ராம் நகர், கிருஷ்ணா நகர் ஆகிய இடங்களில் கனமழையால் பாதிக்கபட்ட பகுதியையும் சீரமைப்பு பணிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்