ETV Bharat / state

டெல்லி கணேஷ் மறைவு: பிரதமர், முதல்வர் உருக்கம்; அரசியல் தலைவர்கள் அஞ்சலி! - DELHI GANESH

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதேபோல பிற கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலைப் பதிவுசெய்து வருகின்றனர்.

டெல்லி கணேஷ் (இடது); முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (வலது)
டெல்லி கணேஷ் (இடது); முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (வலது) (Instagram | Delhi Ganesh & CM Stalin)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 1:36 PM IST

சென்னை: தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியா நடிகராக இருந்த டெல்லி கணேஷ் (80) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். திரைத்துறை, சின்னத்திரை என பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த இவரது இழப்பை தாங்கமுடியாத திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரில் சென்றும் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் நாடகத் துறையின் மீதும் நாட்டம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தமும், அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். தமது ஈடு இணையற்ற நடிப்பாற்றலால் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் தலைமுறைகள் கடந்தும் அவர் ரசிகர்களால் நினைவுகூரப்படுவார்' என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், “மூத்த திரைக்கலைஞர் 'டெல்லி' கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “கலைஞர் கருணாநிதியின் இளைஞன் படத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் டெல்லி கணேஷ். கலைமாமணி பட்டம் பெற்றவர். திமுகவின் இரண்டு கருத்தரங்கில் பங்கேற்றவர்,” என புகழாரம் சூட்டினார். முதலமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் அரசு பணியில் விருதுநகரில் இருப்பதால் முதலமைச்சர் சார்பில், அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், “தமிழ் திரையுலக மூத்த கலைஞர், தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திரையுலகுக்கு வரும் முன் வான் படையில் நாட்டை காக்கும் வீரராக செயல்பட்டவர். விசிக அலுவலகத்திற்கு வந்து எங்கள் அரசியல் பணியை பாராட்டினார். அவரது மறைவு தமிழ் கலை உலகிற்கு நேர்ந்த ஒரு பேரிழப்பு. விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.