ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு - kallakurichi liquor death

kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 115 பேர் தொடர் சிகிச்சையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 9:30 AM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18-ஆம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர்.

இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு தொடர்ச்சியாக உடல் உபாதைகள் ஏற்படவே நேற்று முன்தினம் காலையில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இவர்களில் நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்த மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இறப்பு எண்ணிக்கை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் மூவர் என இதுவரை மொத்தமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 66 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 115 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, விஜய், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீது 328, 304 (2), 41 I, 41 A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார் மூவரையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரையில் ஜூலை 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கிய சின்னதுரை: 55 பேர் மரணத்திற்கு காரணமான கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் விற்பனையான சரக்கு மரக்காணம் சரக்கா? விசாரணையில் திடுக்கிடும் பின்னணி - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.