ETV Bharat / state

“யானை பசிக்கு சோளப்பொறி"- புயல் நிதி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்! - D Jayakumar - D JAYAKUMAR

Jayakumar: யானை பசிக்கு சோளப்பொறி போல மழை வெள்ளத்துக்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது என்றும், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar
ஜெயக்குமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 3:00 PM IST

சென்னை: சர்.பிட்டி.தியாகராயரின் 173வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு, அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “சமுதாயத்தில் மிக பின்தங்கியவர்கள் வாழ்வியல் மேம்பாடு அடைய வேண்டும் என்றும், சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்று பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக நீதிக் கட்சி தொடங்கப்பட்டது. ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்தவர் சர்.பிட்டி தியாகராயர்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி, சென்னையில் கிட்டத்தட்ட ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், சாலைகள் அமைப்பதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பேராசிரியரிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்டு, ரூ.500 கோடி மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது நடப்பது ஒரு இடியமின் சர்வாதிகார ஆட்சி. அதிமுக தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால், இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் சட்டக் கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் மாணவரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிக கண்டிக்கத்தக்கது.

2015ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடைபெற்ற இயற்கை பேரிடர்களான வர்தா புயல், சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் என பல்வேறு புயல்கள் சென்னையைத் தாக்கியிருக்கும் நிலையில், நாம் மத்திய அரசிடம் கேட்டது ஒன்றரை லட்சம் கோடி. ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி போல, இதுவரையில் 7 ஆயிரம் கோடி தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள், குறிப்பாக காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் இது தான் நிலை.

பாஜக மத்தியில் 10 வருடமாக ஆட்சியில் இருக்கிறது. வட மாநிலங்களில் வெள்ளம், புயல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அங்கு உடனடியாக நிவாரணங்களை வாரி வழங்குகிறது. ஏன் தமிழ்நாட்டு மக்கள் வரி தரவில்லையா? தமிழ்நாட்டு மக்களும் வரி தருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரி பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு சரிசமமாக வகுத்துக் கொடுங்கள். வடக்கில் ஒரு நீதி, தெற்கில் ஓர் நீதி என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. கிட்டத்தட்ட 17 வருடமாக மத்தியில் இருக்கும் திமுக நினைத்திருந்தால், அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு முயற்சி செய்திருக்கலாம். தென் மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டை ஓரவஞ்சனையோடு பார்க்கிறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் திமுக நினைத்திருந்தால், நிதிப் பகிர்வு சீராக இருப்பதற்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்திருக்கலாம்.

உரிய அரசியலமைப்புச் சட்டத்தினை அமல்படுத்தியிருந்தால், மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வரிப்பணத்திற்கு ஏதுவாக மக்களுக்கு மீண்டும் திரும்பி வந்திருக்கும். அப்படி எதுவுமே செய்யாமல் தமிழ்நாட்டு உரிமையைக் காப்போம், இந்தியாவை காப்போம் என்று ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டையேக் காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இன்று வடமாநிலத்தில் போய் பிரசாரம் செய்வது கேலிக்கூத்தான விஷயம். 17 வருடமாக இருந்துவிட்டு, நிதி தன்னாட்சியைப் பேணிக் காப்பதற்கு முடியாமல் திமுக இருக்கிறது. அன்றே இதை செய்திருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.