ETV Bharat / state

தேர்தல் பணியில் சிசிடிவி கேமராக்கள்.. தேர்தல் ஆணைய கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தல்! - டி ஜெயக்குமார்

Consultative meeting with political parties: நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகள் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படாததை உறுதி செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

சென்னை
Chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 4:11 PM IST

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.23) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, தேசிய மக்கள் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக துணைத் தலைவர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது, “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். தமிழக தேர்தல் அதிகாரி, மாநில அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலுக்குத் தேவையான சிசிடிவி டெண்டர் விட்டுள்ளனர்.

தற்போது சிசிடிவி டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் சிசிடிவி கேமராவில் திமுகவின் தலையீடு இருந்ததால், தற்போது டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல் ஆணையரிடம் பேசி உள்ளோம்.

நட்சத்திர வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படாததை உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் காவல்துறையினரை விடுத்து, துணை ராணுவப் படையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதியை உடனே வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதிமுக: இதையடுத்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நியாயமான நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் சரிபார்க்க வேண்டும். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படவில்லை, தகுதி உள்ளவர்களின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடி என்று, ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் கண்டறிகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் காவல்துறை பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. மத்திய காவல்படை, துணை ராணுவப் படையை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது ஏன்? அரசு அதிகாரிகளை மாற்றுவதாக திமுக இந்திய தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளது. சிசிடிவி டெண்டரை பொறுத்தவரையில், எவ்வித கட்சியையும் சார்ந்தவர்களாக இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

டெண்டர் வடிவத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும். அதுதான் எங்களது நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.

தேமுதிக: தொடர்ந்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தேர்தல் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அதேபோல், ஆதார் அட்டையில் வாக்காளர் எண் இணைக்க வேண்டும் என்று தேமுதிகதான் முதலில் வலியுறுத்தியது. அது முழுமையாக நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும்.

தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும். கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். ராணுவமும், காவல்துறையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதுவரையிலும் தேர்தல் கூட்டணி தொடர்பான எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. யாரும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை" என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுவதனால் பல குளறுபடிகள் உள்ளது. பொதுமக்களுக்கு சந்தேகம் வலுவாக உள்ளது. வாக்குச்சீட்டுக்கு ஒரு இயந்திரம் வைக்க வேண்டும்.

வாக்களித்த பின் அதன் ரசீது வழங்கப்பட வேண்டும். நடு நிலையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தலில் பண பட்டுவாடாவை கண்காணிக்க வேண்டும். மதுரையில் நடைபெற்றதை போல தவறுகள் நடைபெறக் கூடாது "என்றார்.

காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் சட்டப்பிரிவு பொதுச் செயலாளர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். நீண்ட நாட்கள் இடைவெளி விட்டு நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் எழும். எனவே அதை தவிர்க்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூலித்தொழிலாளி டூ உரிமையியல் நீதிபதி.. மயிலாடுதுறை நபரின் விடாமுயற்சி சாத்தியமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.