ETV Bharat / state

விழுப்புரம் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள மத்திய குழுவினர்..! - CENTRAL TEAM ON CYCLONE ASSESS

மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை மத்திய குழுவினர் இன்று (டிச.7) விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பல்துறை மத்திய குழுவிடம் கோரிக்கை மனு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை தொடர்பான கோப்புப் படம்
பல்துறை மத்திய குழுவிடம் கோரிக்கை மனு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 3:50 PM IST

சென்னை: மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை மத்திய குழுவினர் நேற்று (டிச.06) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்கிட வேண்டி முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்தார்.

மேலும், மத்திய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ஆகியோர் மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்கள் குறித்து விளக்கப் படக் காட்சி மூலம் விளக்கினார்கள்.

இதையும் படிங்க: மீண்டும் கனமழையா? வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

பின்னர், முக்கிய அரசு துறை செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு செல்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய குழுவினர் இன்று (டிச.07) மற்றும் நாளை (டிச.08) ஆகிய இரு தேதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள சேதத்தினை பார்வையிட்டனர்.

மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குநர் ஆர்.சரவணன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இன்று (டிச.07) விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.