ETV Bharat / state

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி! - J Radhakrishnan fake whatsapp

Cyber scam complaint by J Radhakrishnan: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கோப்பு புகைப்படம்
மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கோப்பு புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 7:44 PM IST

சென்னை: தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன், இன்று (மே 11) மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “எனது பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் தொடங்கி, தனக்கு நெருக்கமானவர்களிடம் அவசர தேவை என்று பணம் கேட்டு சிலர் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இது தொடர்பாக எனக்கு நெருக்கமான பலரும் போன் செய்து, என்னிடம் இந்த மோசடி குறித்து தெரிவித்த போது எனக்கு தெரிய வந்தது. இதனால் உடனடியாக மோசடி செய்யும் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நபர் வடமாநில நபர் என்பது தெரிய வந்தது. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியவுடன், அந்த நபர் எனது புகைப்படத்தை நீக்கினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இதனால் யாரும் இந்த மோசடி நபரிடம் பணத்தை இழக்க வேண்டாம் என தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட வடமாநில நபரின் செல்போன் எண்ணை வைத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே போன்ற ஏற்கனவே பாஸ் ஸ்கேம் (boss scam) மோசடி பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு இது போன்ற மோசடி அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடி போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது தாக்குதல்.. 6 பேர் கைது! - Youngsters Arrested At Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.