ETV Bharat / state

”அண்ணா, பெரியார் பெயரைச் சொல்லி எவ்வளவு நாள் ஏமாற்றுவீர்கள்?” - தங்கர் பச்சான் சரமாரி கேள்வி! - Thankar Bachan - THANKAR BACHAN

Actor Thangar Pachan: அண்ணா, பெரியார் பெயரைக்கூறி இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை ஏமாற்றுவார்கள் என கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பினார்.

தங்கர் பச்சான் புகைப்படம்
தங்கர் பச்சான் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 9:29 PM IST

கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களைச் சந்திக்க 22 நாட்கள் மட்டுமே கிடைத்தது. முழு காய்ச்சலுடன் மக்களைச் சந்தித்தேன். கடலூர் மாவட்டத்தின் தீராத பிரச்னைகளைத் தீர்க்கவே தேர்தல் களம் கண்டு இரண்டு லட்சம் வாக்குகள் பெற்றேன்.

தங்கர் பச்சான் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றி. அதிகாரம் இருந்ததால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இத்துடன்‌ என் அரசியல் களம் நிற்காது. கடந்த முறை 38 பேரால் நாட்டுக்கு கிடைத்தது என்ன? உங்கள் தொகுதியின் எம்.பி என்ன செய்தார்? மீண்டும் அவர்களே வந்தால் என்ன செய்வார்கள்? உங்களுக்கு அரசியல் விடுதலை எப்படி கிடைக்கும்?

இதற்கு அரசியல் புரிதல் மக்களுக்கு இல்லாததே காரணம். அண்ணாவையும், பெரியாரையும் இன்னும் எவ்வளவு நாட்கள் சொல்லி ஏமாற்றுவார்கள்? அடுத்த ஐந்து ஆண்டுகள் மக்கள் பல இன்னல்களைச் சந்திப்பர்‌. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை. என் மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் தங்கர் பச்சான் போராடுவேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை தோல்வி கொண்டாட்டம்.." மட்டன் பிரியாணி விருந்து வைத்த தபெதிக! - TPDK

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.