தென்காசி: அட்சய திருத்தியை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் நகைக்கடைகளில் சென்று தங்களுக்குப் பிடித்த தங்கம், வெள்ளி நகைகளை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என நம்பிக்கை வைத்துள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து நகைக்கடைகளிலும், இன்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், தென்காசி சங்கரன்கோவிலில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நாளில் பெரும்பாலானோர் இன்று புது நகை வாங்கினால் அவைப் பெருகும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஏராளமான மக்கள் இன்று காலையிலேயே தங்கள் வீடுகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு நகைகளை வாங்க ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதில், தென்காசி சங்கரன்கோவிலில் மற்றும் சுரண்டை புளியங்குடி ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தெற்கு ரதவீதி தெருக்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் தினசரி மக்களின் வருகையை விட அதிகமாகவே இருந்தது. இதனால், நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க:நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கம், வெள்ளி கொள்ளை.. தாம்பரம் அருகே பரபரப்பு!