ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் போட்டி! - CPIM Candidates announced

CPIM Parliament Candidate list: 18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

tn-dindigul-and-madurai-cpim-parliament-candidates-announced
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக வேட்பாளர்களை சிபிஐ (எம்) அறிவித்துள்ளது.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 5:43 PM IST

சென்னை: தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான சு.வெங்கடேசன் எம்.பி மீண்டும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமானதாகத் தீர்மானித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.