ETV Bharat / state

"தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்" - தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை!

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், இவர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றும் நிகழ்வு, இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றும் நிகழ்வு, இரா.முத்தரசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

திருச்சி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு ஆசிரியர் பயிலரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று(அக் 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "டிசம்பர் 2025 வரையிலும் ஓராண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆண்டு முழுவதும் பல்வேறு கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இரா.முத்தரசன் பேட்டி (Credits -ETV Bharat Tamil Nadu)

திமுக கூட்டணியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, அவரது ஆசை மற்றும் விருப்பம், அவரது கட்சி எரிந்து கொண்டிருக்கிறது. முதலில் அதனை அணைப்பதற்கு ஏற்பாடு செய்யட்டும்.

இதையும் படிங்க : "அதிமுக சீனியர்களை முந்தி பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி" - உதயநிதி பதிலடி!

காவலர்களை பொதுவெளியில் அநாகரீகமாக பேசுவது அதிகரிக்கிறது தொடர்பான கேள்விக்கு, காவலர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், தவறு செய்யும் ஒன்றிரண்டு பேர்களை தண்டிக்கலாம் அதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த காவலர்களையும் அவதூறாக பேசுவது நாகரீகம் அல்ல. திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என சொல்வது யார்? எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம், இந்த அணி தொடரும் மேலும் பலப்படும்.

பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். நடவடிக்கை எடுத்தால் இந்த அரசு அராஜக அரசு என்கிறார்கள். ஆனால், எல்லா பிரச்னைகளிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் நிரந்தப்படுத்த வேண்டும். குறிப்பாக, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு வழங்குவது போல இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் பாடலை மாற்றுவேன் என சீமான் கூறியது தொடர்பான கேள்விக்கு, ஆட்சிக்கு வந்தபிறகு அவர் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆட்சிக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக தற்போது தமிழ்த்தாயை மதிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை சீமான் முதலில் இப்போது கூறட்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.