ETV Bharat / state

நாளை நடைபெறுகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு! - MBBS special category Counseling

MBBS & BDS special category Counseling: நாளை நடைபெற உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்விற்கு 1,200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அருணலதா தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அருணலதா
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அருணலதா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 10:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை நேரடியாக நடைபெறும் கலந்தாய்விற்கு 1,200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அருணலதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அருணலதா, “தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 28ஆம் தேதி வரை www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இதில் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் வங்கி விடுமுறை வருவதால் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ஆம் தேதிகள் வரையில் அனுமதி வழங்கி உள்ளோம். இதில் 28ஆம் தேதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 29ஆம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு, 30ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்படும்.

எம்பிபிஎஸ் படிப்பில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் 150 இடங்கள் கூடுதலாக வந்துள்ளது. கடந்தாண்டு 9,050 இடங்கள் என்பது நடப்பாண்டில் 9200 என அதிகரித்துள்ளது. அன்னை மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களும், கன்னியாகுமரி மிஷன் மருத்துவக்கல்லூரியில் 100 இடங்களும் கூடுதலாக வந்துள்ளது. அரசு, நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களை அவகாசம் எடுத்துக் கொண்டு விண்ணப்பிக்கலாம். அதனால் மாணவர்கள் அவசரப்பட்டு சாய்ஸ் லாக் செய்ய வேண்டியதில்லை.

இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 22) அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடி முறையில் சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது. எனவே மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் 964 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் வழங்கபடுகிறது. அதன் அடிபடையில் இட ஒதுக்கீட்டில் 622 இடங்கள் உள்ளது. அதில் எம்பிபிஎஸ் படிப்பில் 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 126 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிப் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும். பிடிஎஸ் படிப்பில் 11 இடங்களும் உள்ளது.

இதற்கு 133 மாணவர்கள் தகுதிப்பெற்றுள்ளனர். இதில் உள்ள மீதி இடங்கள் பொதுப்பிரிவிற்கு மாற்றப்படும். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1 இடமும் உள்ளது. இதில் 30 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 7 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஒரு இடம் உள்ளது. அதற்கு 15 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பிரிவில் ஆன்லைன் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் இடங்களை தேர்வுச் செய்யும் மாணவர்கள் வைப்புத்தொகை செலுத்தத் தேவையில்லை. தனியார் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் இந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் உள்ள ஒன்று முதல் 1007 வரை சீட்டுகளுக்கு நீட்தேர்வு மதிப்பெண் 669 முதல் 442 வரையில் பெற்றவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிசிஎம் பிரிவில் இட ஒதுக்கீட்டு தரவரிசையில் 29 முதல் 60 வரையிலும், எஸ்சி தரவரிசையில் 99 முதல் 202 வரையிலும், எஸ்சிஏ பிரிவில் தரவரிசையில் 29 முதல் 50 வரையிலும், எஸ்டி தரவரிசையில் 3 முதல் 15 வரையில் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.