ETV Bharat / state

பெயர் பலகைகளில் தப்பு தப்பா தமிழ் வார்த்தை... ஸ்டிக்கர் ஒட்டி சரி செய்த தாம்பரம் மாநகராட்சி! - tambaram corporation sign board

tambaram corporation sign board eror issue: தாம்பரம் மாநகராட்சியில் தெரு பெயர் பலகையில் தவறாக ஒட்டப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் குறித்து இணையத்தில் வைரல் ஆக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் புதிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளது.

பிழையுடன் பெயர் பலகை, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பலகை
பிழையுடன் பெயர் பலகை, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பலகை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 7:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தாம்பரம் பெருநகராட்சியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 70 வார்டுகள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு தற்போது தாம்பரம் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்தவர் மேயராக பதவி வகித்து வருகிறார்.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி சார்பாக மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளை புதுப்பித்தும், ஏற்கனவே இருந்த பெயர் பலகைகளில் புதிய ஸ்டிக்கர்களும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒட்டி வருகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கு 5.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி நான்காவது மற்றும் ஐந்தாவது மண்டலங்களில் சில தெருக்களின் பெயர் பலகையில் புதிய ஸ்டிக்கர் ஒட்டியதில் தெருக்களின் பெயர் தமிழில் தவறாக ஒட்டப்பட்டு இருந்துள்ளது.

வால்மீகி தெரு என ஓட்டுவதற்கு பதிலாக 'வால்மேகி' தெரு எனவும், அழகேசன் தெரு என்பதருக்கு பதிலாக 'அழகோசன்' எனவும், பெரியாழ்வார் தெரு என்பதற்கு பதிலாக 'பெரி ஆழ்வார்' தெரு எனவும் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர்.

பின்னர் இது குறித்து தாம்பரம் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, தமிழில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள தவறான எழுத்துக்களை மறைத்து புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டி உள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம்பரம் மாநகராட்சியில் தெரு பெயர் பலகைகள் புதியதாக அமைத்தல் மற்றும் பழைய பலகையில் ஸ்டிக்கர் ஒட்டுதலுக்காக நிதி ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில பெயர்கள் தவறுதலாக அச்சிடப்பட்டு அதனை கவனிக்காமல் ஒப்பந்ததாரர்கள் ஊழியர்கள் மூலம் ஒட்டியுள்ளனர். இது குறித்து புகார் வந்ததும், அன்றைய தினமே அதனை மாற்றி புதிய ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் மாநகராட்சியில் வேறு எந்த இடங்களிலும் இது போன்ற குறைகள் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குழந்தையுடன் குடும்பமே பறிபோன சோகம்.. உடல்கள் அங்கேயே தகனம்.. சோகத்தின் விளிம்பில் குன்னூர் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.