திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நீர் இறைக்கும் அறை இருக்கிறது. அங்கு மின் வாரியத்தின் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் 250 கிலோ வாட் மின்மாற்றியுடன் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 12 கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுக்குடிநீர் திட்ட நீர் இறைக்கும் அறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்திலிருந்து மின்மாற்றியை உடைத்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் கிராம காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குடையால் முகத்தை மறைத்து பைக் திருட்டு - வைரலாகும் சிசிடிவி!