ETV Bharat / state

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை பாரமாக கருதுகிறேன்"- துரை வைகோவின் அதிருப்திக்கு காரணம் என்ன? - Durai Vaiko

Durai Vaiko: என்னுடைய தந்தை வைகோவின் உடல்நிலை மற்றும் தொண்டர்களின் வற்புறுத்தலின் காரணமாக 'தேர்தல் அரசியலுக்கு' நான் வந்துள்ளேன் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Durai Vaiko
துரை வைகோ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 1:26 PM IST

துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மதிமுகவிற்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட போவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டி வருகின்றார். அந்த வகையில் இன்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்," திருச்சி எம்பியாக நான் தேர்வு செய்யப்பட்டால் புதுக்கோட்டை உள்ளிட்ட விவசாயிகளின் 30 ஆண்டுகால கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்வேன்.

எனது தந்தை வைகோவைப் போல் என்னால் செயல்பட முடியாது. ஆனால் அவரை போல் பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்வேன், எனக்கு இது தான் முதல் தேர்தல். திமுகவின் தேர்தல் அறிக்கை நிச்சயமாக நிறைவேற்ற சாத்திய கூறுகள் உள்ளன.

நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் அதனை ஒழிக்க திமுக பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதே போல் சிஏஏ சட்டமும் ரத்து செய்யப்படும்.

14 ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டபோது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பம்பரம் சின்னம் கிடைக்காத பட்சத்தில் பொது சின்னத்தில் போட்டியிடுவோம். மதுக்கடைகளை படிப்படியாக அகற்ற வேண்டும்.

பூரண மது விலக்கு வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது. மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன காரணத்திற்காக பாஜக சீட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அரசியல் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை என்னுடைய தந்தை வைகோவின் உடல்நிலை மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வற்புறுத்தலின் காரணமாக தேர்தல் அரசியலுக்கு நான் வந்துள்ளேன்.

இது எனக்கு பாரமாக உள்ளது. இருப்பினும் 14 வருடத்திற்கு பிறகு பம்பரம் சின்னத்தில் நான் போட்டியிட இருப்பதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உள்ளூர் தலைவர்கள் தான் அந்தந்த தொகுதியில் இருக்க வேண்டும். என்பது கட்டாயம் கிடையாது. உள்ளூர் வேட்பாளர்கள் தான் அந்த தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்பது கிடையாது.

நான் வெளியூராக இருந்தாலும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் எம்பி அலுவலகத்தைத திறந்து மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தற்போது "கண்டா வர சொல்லுங்க" போஸ்டரை பல எம்பிக்களுக்கு ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த தேர்தலின் போது என்னுடைய பெயரும் அதில் இடம்பெறக்கூடாது சென்று நான் தெளிவாக உள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒத்த வீடியோவால் பறிபோன எம்பி வாய்ப்பு.. திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி என்ன? - KMDK Namakkal Candidate Changed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.