ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம்! - அணுசக்தி துறை உயர்மட்ட குழு கூட்டம்

Nuclear Power Plant: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ரஷ்ய மற்றும் இந்திய நாட்டின் அணுசக்தி உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

consultative-meeting-between-russia-and-india-officials-at-kudankulam-nuclear-power-plant
அணுசக்தி துறை அதிகாரிகளின் உயர்மட்ட குழு கூட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 3:53 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ரஷ்ய மற்றும் இந்திய நாட்டின் அணுசக்தி உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டம், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

இதில் ரஷ்ய அணுசக்தி கழகத்தின் தலைமைச் செயல் இயக்குநர் அலெக்ஸ் லிக்காசேவ், இந்திய அணுசக்தி துறைத் தலைவர் மற்றும் செயலாளருமான மருத்துவர் அஜீத்குமார் மொகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முதல் நாள் கூட்டத்தில் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு உலைகளின் கட்டுமானத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், உதிரி பாகங்கள் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் அணு உலைகள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக, கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் கூடுதல் சரத்துகளை ஏற்படுத்தி, கூடுதல் அணு உலைகள் கட்டுவதைக் குறித்த ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானதாகத் தெரிகிறது. இருநாட்டு உயர் அதிகாரிகளும் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை மிக விரைவாக கட்டி முடிப்பது பற்றியும், பிரிக்ஸ் அமைப்பில் இருக்கக்கூடிய பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் கூடங்குளத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தரப்பில் இந்திய அணுசக்தி துறை செயலாளரும், ரஷ்ய தரப்பில் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக உறுப்பினர்கள் உள்அட உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டெல்லியில் திமுக எம்பிக்கள் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்; பினராயி விஜயன் தலைமையிலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.