ETV Bharat / state

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்; தனியார் பேருந்து நடத்துநர் கீழே விழுந்து பலி! - Private Bus CONDUCTOR DIED - PRIVATE BUS CONDUCTOR DIED

poonamallee bus conductor death: சென்னை, பூந்தமல்லி அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துநர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

poonamallee bus conductor death
poonamallee bus conductor death (conductor murugan (photo credits to etv bharat tamil nadu))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 10:53 AM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் முருகன்(50). இவர் தனியார் பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் முருகன் பணியில் இருந்தார். அவருடன் சகாதேவன்(49) என்பவர் ஓட்டுநராக பணியில் இருந்துள்ளார்.

பூந்தமல்லியில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த போது பேருந்தின் படிக்கட்டில் நடத்துநர் முருகன் நின்று கொண்டு இருந்துள்ளார். சரியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை திருமழிசை கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது,

ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்த நடத்துநர் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு வரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் முருகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பேருந்து வேகமாக சென்றுக் கொண்டு இருக்கும் போது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் நடத்துநர் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார் என தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து நடத்துநர் ஒருவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது +2 தேர்வு முடிவு வெளியீடு.. தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்! - TN 12th results 2024!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.