ETV Bharat / state

மனைவி முதல் சொத்துக்களை வாரி சுருட்டியது வரை.. போலிச் சான்றுகளால் ஏமாற்றிய நபரின் திடுக்கிடும் பின்னணி! - tirupathur Old lady petition

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 7:07 PM IST

Old lady fake death certificate: திருப்பத்தூரில் உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக கூறி சான்று பெற்று போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாயை ஏமாற்றி பெற்று மூதாட்டியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு வரும் மூதாட்டி
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு வரும் மூதாட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (85). இந்த மூதாட்டிக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என மொத்தம் 4 பிள்ளைகள் இருந்த நிலையில், இவரது மூத்த மகள் சாந்தி என்பவர் ஜோலார்பேட்டையில் வசித்து வந்த ஆந்திர மாநிலம், வக்காலா பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் சென்னைக்கு சென்று வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிஷோர் குமார் என்ற மகன் பிறந்த பிறகு சில ஆண்டுகளில் அவர்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் உரிமையாளர் விடுதியை நடத்த முடியாமல் மூடி உள்ளார். அப்போது, சாந்தி தனது தாயிடம் முறையிட்டு அவரிடம் இருந்து பணத்தைப் பெற்று அதே விடுதியை சாந்தி பெண்கள் விடுதி என்று பெயர் வைத்து சென்னை கோடம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் நடத்தி வந்துள்ளார்.

மேனேஜர் எண்ட்ரியால் சிதைந்த குடும்பம்: அதனைத் தொடர்ந்து, ஒரு ஹாஸ்டல் பல ஹாஸ்டலாக மாறும் பொழுது ஆட்கள் தேவை இருந்த நிலையில் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிரிராஜ் என்பவரை மேனேஜராக சாந்தி வேலைக்கு சேர்த்துள்ளார். எங்கு போனாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக சென்று வரும் நிலையில், இருவருக்குள்ளும் திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சாந்தியின் கணவர் பாபு, அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் பாக்காலா என்ற ஊருக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவரது மகன் கிஷோரை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வளர்த்துள்ளனர். பல வருடம் கழித்து, இதனை எல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேனேஜர் கிரிராஜ், சாந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக சான்று முதல் அனைத்தும் தயார் செய்து வைத்து இருந்துள்ளார்.

சொத்துக்கள் மீது குறி: கிரிராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி இறந்த நிலையில், கிரிராஜ் தனது மகன் கிரன் குமாருடன் சேர்ந்து சாந்தி பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

அதற்கு வாரிசு சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவைப்பட்ட காரணத்தினால், சாந்தியின் தாயார் லீலாவதி இறந்து விட்டதாக கூறி அவருக்கு இறப்புச் சான்றும் பெற்று, சுமார் 20 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்துக் கொண்டுள்ளார். அதேபோன்று, சாந்தியின் மகனான கிஷோர் குமார் அவரது மனைவியுடன் வாழ்ந்த வீட்டையும் விட்டு வைக்காமல் அந்த வீட்டையும் அடிதடி நடத்தி அத்துமீறி அபகரித்துக் கொண்டுள்ளார் கிரிராஜ்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாந்தியின் மகன் கிஷோர் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லீலாவதி இறந்துவிட்டதாகவும், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தலைமைச் செயலாளருக்கு கிஷோர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில், இது மோசடி என்பதால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

அதன் பேரில் கிஷோர் தனது உயிருடன் இருக்கும் பாட்டியுடன் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டிக்கு இறப்புச் சான்று பெற்ற கிரிராஜ் மற்றும் அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் கைது! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.