ETV Bharat / state

நெல்லையில் கனமழை; "அராஜகம் பண்ணக்கூடாது; ஒழுங்காக முகாம்களுக்கு செல்லுங்கள்" - மக்களை கடிந்து கொண்ட ஆட்சியர்! - TN WEATHER UPDATE

திருநெல்வேலியில் கனமழை பெய்து வருவதால், முக்கூடல் அம்பேத்கர் காலனியில் வெள்ளோடை அருகே உள்ள குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

முகாம்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்திய கலெக்டர்
முகாம்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்திய கலெக்டர் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 8:16 PM IST

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்றிரவு விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்கள் நிரம்பியும், குளத்தின் கரைகள் உடைந்து வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

எனவே, மழைநீர் தேங்கிய பகுதிகளை இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முக்கூடல் அம்பேத்கர் காலனியில் வெள்ளோடை அருகே உள்ள குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டார்.

முகாம்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்திய கலெக்டர் (Credits - ETV Bharat Tamilnadu)

தொடர்ந்து ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்வதால் பாதுகாப்பு கருதி அனைவரையும் முகாம்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தினார். இருந்தாலும், சிலர் வீட்டை விட்டு வெளியேறாமல் சிறிது நேரம் கழித்து முகாம்களுக்கு செல்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் நான் இங்கேயே நிற்கிறேன்; நீங்கள் முதலில் இங்கிருந்து நகருங்கள். இங்கு யாரும் இருக்க வேண்டாம். நன்றாக படித்த பசங்களே இப்படி செய்யலாமா? என்றார். தொடர்ந்து பெண்களை பார்த்து, இங்க பாருங்க இது விளையாட்டு கிடையாது; எல்லோரையும் அழைத்துக் கொண்டு முகாமிற்கு போகாவிட்டாலும் கூட, உங்கள் சொந்தக்காரங்க வீட்டுக்காவது செல்லுங்கள். நாங்கள் வெயிட் பண்ணுகிறோம்.

இதையும் படிங்க : நெல்லையை புரட்டிப்போட்ட மழை; தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு.. கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தண்ணீர் அதிகமாகி விட்டால் தீயணைப்புத் துறையை யார் அனுப்புவார்கள்? முடியாதவர்கள் என்றால் சொல்லலாம். அராஜகம் பண்ணக்கூடாது எவ்வளவு தண்ணீர் போகிறது. அவ்வளவு பெரிய வானிலை அறிஞர்களே புயல் மழையை சரியாக கணிக்க முடியாமல் திணறுகிறார்கள். நீங்கள் ஓடை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் நியாயமா? அப்படி பண்ணக் கூடாது என்றார்.

தொடர்ந்து அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் கோமதியை அழைத்து, இவர்கள் திரும்ப வந்தார்கள் என்றால் நீங்கள் வீட்டை பூட்டி விட்டு மின் இணைப்பை துண்டித்து விடுங்கள்” என்று கூறினார். மக்கள் வெள்ளத்தில் பாதிக்க கூடாது என்ற அக்கறையில் மாவட்ட ஆட்சியர் இதுபோன்று கூறினாலும் கூட, ஆக்ரோஷமாக அவர் பேசியது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.