ETV Bharat / state

கோவை விமான நிலைய விரிவாக்கம்; இதுவரை ரூ.1,848 கோடி இழப்பீடு - ஆட்சியர் தகவல்! - covai Airport expansion - COVAI AIRPORT EXPANSION

Coimbatore Collector: கோவை விமான நிலைய விரிவாக்கத்தில் நிலம் கையகப்படுத்துவதில் 97 சதவீத பணிகள் முடிந்து விட்டது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை கலெக்டர், எம்பி, எஸ்பி
கோவை கலெக்டர், எம்பி, எஸ்பி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 9:30 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கோயம்புத்தூர் எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கோவை கலெக்டர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதில் பேசிய ராஜ்குமார், "கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கோவை விமான நிலையத்தில் விரிவாக்கம் சம்பந்தமான நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு மத்திய அரசிற்கு முன் நுழைவு அனுமதி அளிக்கப்பட்டு, அதனுடைய நகல் நேற்றைய தினம் நமது மாவட்ட ஆட்சியருக்கு வந்துவிட்டது.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த 2010ஆம் ஆண்டு நில எடுப்பு பற்றி அப்போதைய திமுக அரசு முதன்முதலில் ஒரு அரசாணையை வெளியிட்டது. அதன் பிறகு, இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் திமுக ஆட்சியில் முடிவுற்றிருக்கிறது.

தேர்தல் முடிந்த பிறகு இரண்டு, மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே நல்ல முடிவெடுத்து இந்த நல்ல செய்தியை கோவை மக்களுக்கு முதலமைச்சர் பரிசாக அளித்திருக்கிறார். அதேபோல், இந்த விமான நிலைய விரிவாக்கத்தில் தொழில்துறை அமைச்சரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. தமிழக முதலமைச்சர் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். இனி மத்திய அரசு தான் மிக விரைவாக இதைச் செய்து தர வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் தமிழக அரசு அதன் நிபந்தனைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்த நிலையில், அவர்களது கொள்கை வேறு; எங்களுடைய கொள்கைகள் வேறு எனவும், நிபந்தனைகள் முற்றிலும் தளர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சியாக சிபிஎம் இருக்கின்ற பொழுதிலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தற்பொழுது பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்து விட்டோம். ஆனால், மத்திய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாங்கள் கொடுத்து விட்டோம். இனி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது பங்களிப்பைச் சொன்னால் நாங்கள் தயாராக உள்ளோம். கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டு விட்டோம். அதற்கு டிசைன் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசைன் செய்தால் தான் எஸ்டிமேட் போட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்" என்றார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, "கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தியது 662 ஏக்கர். இதில் 468.23 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. 97 சதவீத பணி முடிந்துவிட்டது. 456 ஏக்கர் நிலத்திற்கு நாம் தற்போது அனுமதி கொடுக்கிறோம். மீதம் இருக்கின்ற நிலத்தில் பிரச்னை உள்ளது.

அதில், கோர்ட் கேஸில் ஒரு எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. மீதி ஓஎஸ்ஆர் நிலம் மூன்று ஏக்கர். அதுபோக இரண்டு ஏக்கர் மேலும் கையகப்படுத்துவதற்காக மூன்று ஏக்கர் என இறுதியாக உள்ளது. இந்த மாத கடைசிக்குள் இதனை முடித்து விடுவோம் என டார்கெட் வைத்துள்ளோம்.

புறம்போக்கு நிலம் 29 ஏக்கர் உள்ளது. அதில், 20 ஏக்கர் நிலத்தை நாம் தற்போது ஒப்படைக்கிறோம். பிரச்னைக்குரிய இடமாக உள்ள 9 ஏக்கர் நிலத்தில் இறுதி அரசாணை தமிழக அரசிடம் இருந்து வந்த பிறகு அந்த நிலங்களையும் ஒப்படைப்போம். விமான நிலைய விரிவாக்கத்திற்காக தற்போது வரை ரூ.1,848 கோடி இழப்பீடாக கொடுத்துள்ளோம்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, நாம் எப்பொழுது கையகப்படுத்தினோமோ அதிலிருந்து பணம் கட்ட வேண்டி இருக்கும். அதனால் அந்த பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நாம் வழக்குகளில் தொந்தரவு செய்வதில்லை.

பைபாஸ் சாலையில் இருந்து ஒரு சாலை விமான நிலையத்திற்கும், அவிநாசி சாலையிலிருந்து ஒரு சாலை விமான நிலையத்திற்கும் வர வேண்டி உள்ளது. அதற்கான நிலங்களுக்காக விமான நிலைய இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளோம். காவல்துறை சார்பிலும் ஒவ்வொரு விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.. நெல்சன் திட்டவட்டம்! - armstrong murder case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.