ETV Bharat / state

கோவை ஓட்டல் உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை முயற்சி... கந்து வட்டி காரணமா? - suicide attempt for debt issue - SUICIDE ATTEMPT FOR DEBT ISSUE

Suicide Attempt for Debt Issue in Coimbatore: கோவையில் கடன் சுமை காரணமாக ஓட்டல் உரிமையாளர் தனது மனைவியுடன் காரில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில், மனைவி உயிரிழந்து கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicide Attempt for Debt Issue in Coimbatore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 1:10 PM IST

கோயம்புத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன், சுமதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு, தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார். தற்போது, மனோகரன் - சுமதி தம்பதியினர் தனது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் கோவை, சவுரிபாளையம் மற்றும் சேரன்மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனோகரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும், தற்போது இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும், அதனால் தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் (வியாழக்கிழமை) வழக்கம்போல் உணவகத்திற்குச் சென்று மதியம் வீடு திரும்பிய மனோகரன், மாலையில் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு மனைவி சுமதியுடன் காரில் சென்றுள்ளார்.

அதையடுத்து, கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரை இணைப்புச் சாலையில் நிறுத்திவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதில், சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில், மனோகரன் உயிருக்குப் போராடி வந்துள்ளார். அதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துவிட்டு, சுங்கச்சாவடியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவக் குழுவினர், இருவரையும் பரிசோதனை செய்துள்ளனர். அதில், சுமதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்த மருத்துவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மனோகரனை மீட்டு, நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் தகவறிந்து வந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேலு தலைமையிலான போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சாக்லேட்டில் மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக மனோகரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மனோகரனுக்கு கடன் பிரச்சனை மற்றும் உடல் நலக்குறைபாடு பிரச்சனை இருப்பதாகவும், அதனால் கூட தம்பதியினர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடன் பிரச்சனை மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாகத் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடி அருகே தம்பதியினர் காரில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

stop suicide
stop suicide

இதையும் படிங்க: வேலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நூதன திருட்டு.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி? - 200 Sovereign Gold Jewelery Theft

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.